செஸ் வீரருக்கு ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மான்டினீக்ரோ நாட்டின், பெட்ரோவாக்கில் நடைபெற்ற நாட்டில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்று வரலாறு படைத்த தமிழக செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷை பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், அதுல்ய மிஸ்ரா, ஜெ. மேகநாத ரெட்டி மற்றும் பிரணவ் வெங்கடேஷ் பெற்றோர் உடனிருந்தனர்.