ரூ. 5,000 உதவித்தொகை மக்களுக்கு கிடைத்த பேருதவி : பெ. சண்முகம்
திருவாரூர், பிப். 13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ.சண் முகம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார். அப்போது “தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்க ளுக்கு இன்று ஒரு இன்ப அதிர்ச்சியை வழங்கி உள்ளார்; மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5000 வழங்கிய இந்த அறிவிப்பை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் நலிவடைந்த நிலையில் உள்ள பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு இந்த ரூ. 5,000 உரிமைத் தொகை யானது பேருதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார். பொதுவாக, “ஒன்றிய பாஜக அர சானது, தமிழ்நாடு, கேரளம் போன்ற பாஜக ஆளாத மாநில அரசு களுக்கு எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ, முட்டுக்கட்டை போட முடியுமோ, அவ்வளவை செய்து வருகிறது. திமுக உள்ளிட்ட தங்களுக்கு எதிரான கட்சிகளின் செல்வாக்கு உயர்ந்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக முத்துக்கட்டை போடு கிறார்கள். இத்தகைய சூழலில் தான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தற்போது அறி வித்துள்ள ரூ. 5 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகையை வங்கியில் செலுத்திய பின்னரே ஊடகங் களுக்கு தெரிவித்துள்ளார். இத்தகைய அணுகுமுறை அனைவரிடத்திலும் நல்ல முறையில் பேசுபொருளாகி உள்ளது” என்றும் பெ. சண்முகம் பாராட்டியுள்ளார்.
