tamilnadu

img

மதுக்கடைக்கு எதிராகப் போராடியதால் ஆத்திரம் பொன்னமராவதி காரையூரில் சிபிஎம் கிளைச் செயலாளர் மீது ரவுடிகள் தாக்குதல்!

மதுக்கடைக்கு எதிராகப் போராடியதால் ஆத்திரம் பொன்னமராவதி காரையூரில் சிபிஎம்  கிளைச் செயலாளர் மீது ரவுடிகள் தாக்குதல்!

பொன்னமராவதி, ஜன. 8 -  பொதுமக்கள் வசிக்கும் இடத்தில்  அரசு மதுபானக் கடை திறப்பதற்கு எதிராக போராடியதால், ஆத்திர மடைந்த சமூக விரோதிகள், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காரை யூர் கிளைச் செயலாளர் ஏ. சௌந்தர ராஜன் மீது, தாக்குதல் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி அருகே உள்ள காரையூ ரில், அரசு மதுபானக் கடை அமைக்கக் கூடாது, என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செய லாளர் சௌந்தரராஜன் தலைமை யில் கடந்த நவம்பர் 25 அன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இப்போ ராட்டத்தில் பொதுமக்கள் ஏராளமா னோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15 அன்று காரை யூரில் மதுபானக்கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என  மாவட்ட ஆட்சியரிட மும் மனுக்கொடுத்து வலியுறுத்தப்பட்டது. இந்தப் பின்னணியில் தான், சௌந்தரராஜன் புதன்கிழமையன்று காரையூர் பேருந்து நிறுத் தம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்குவந்த முருகேசன், டோரி கண்ணன் ஆகியோர், மதுக்கடை  அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பீர்களா? என்று கேட்டு செளந்தர்ராஜன் மீது  கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள் ளனர். இதில், படுகாயமடைந்த சௌந்தர ராஜன் மேல் சிகிச்சைக்காக புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அவரை, கட்சியின் மாவட்டச் செயலாளர் சங்கர், செயற் குழு உறுப்பினர் துரை. நாராய ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் குமார் உள்ளிட்டோர் சந்தித்து நடந்த  விபரங்களைக் கேட்டறிந்து, ஆறுதல்  கூறினர்.

காவல்துறை அலட்சியத்தால் ஊக்கம் பெற்ற சமூக விரோதிகள் சிபிஎம் மாவட்டக்குழு கண்டனம்

சௌந்தர்ராஜன் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.  சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், “மதுபானக்கடை அமைக்கும் முயற் சியில் ஈடுபட்டு வருபவர்கள், சிபிஎம் போராட்டங்களால் ஆத்திரமடைந்து, சௌந்தரராஜனுக்கு தொடர்ந்து  கொலை மிரட்டல் விடுத்து வந்த னர். இதுபற்றி, பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாள ரிடம் மனுக் கொடுத்து சௌந்தர ராஜனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வும், கொலை மிரட்டல் விடுபவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கவும் வலி யுறுத்தப்பட்டது. ஆனால், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததை சாதகமாகப் பயன் படுத்தி, சௌந்தரராஜனை சமூக விரோதிகள் கொலை வெறியுடன் தாக்கியுள்ளனர். இதில், அவருக்கு நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகிறார். மதுபானக்கடை நடத்தி மக்கள் வாழ்வை சீரழிக்க முயலும் சமூக விரோதிகளின் அராஜகமான செயல் பாடுகளை கண்டுகொள்ளாத காவல் துறைக்கு கட்சியின் மாவட்டக்குழு கடும் கண்டனத்தைத் தெரி வித்துக்கொள்கிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தாக்குதல் தொடுத்த வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சௌந்தரராஜனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.  காரையூரில் மதுபானக் கடை திறக் கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட அளவிலான போராட்டம் நடத்தப்படும்” என எஸ். சங்கர் குறிப்பிட்டுள்ளார்.