tamilnadu

img

அறுவை சிகிச்சை செய்யும் ரோபோட்டுகள்

அறுவை சிகிச்சை செய்யும் ரோபோட்டுகள்

வெட்ட, க்ளிப் செய்ய, தேவையற்ற திசுக்களை அகற்ற உதவும் கருவிகளுடன் உள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயிற்சி பெற்ற ரோபாட் கை மனிதரின் உதவியின்றிபன்றியின் பித்தப் பையை (Gallbladders) வெற்றிகரமாக நீக்கியதைத் தொடர்ந்து ரோபாட்டுகள் தானியங்கி முறையில் நடத்தும் அறுவை சிகிச்சைகள் வரும் பத்தாண்டுகளுக்குள் மனிதர்களிடம் மேற்கொள்ளப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ரோபாட் செய்யும் அறுவைசிகிச்சை இறந்த பன்றியின் உடலில் இருந்து உறுப்பு கள் இந்த ரோபாட் அறுவைசிகிச்சையின் மூலம்  நீக்கும் காணொலிகள் மனித மருத்துவர் களின் காட்சிகளுடன் இணைத்துக் காட்டப் பட்டன. இத்தகைய ஆய்வுகளில் ஒரு திருப்பு முனையாக 100% துல்லியத்துடன் பன்றி உறுப்பு களில் எட்டு அறுவை சிகிச்சைகள் யுஎஸ் மேரிலாந்து ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் (Johns Hopkins) பல்கலைக்கழக அறுவைசிகிச்சை நிபுணர் குழுவால் நடத்தப்பட்டது. “இது நம்பிக்கையளிக்கும், பரவசமூட்டும் வளர்ச்சி” என்று யு கே ராயல் அறுவை  சிகிச்சை மருத்துவர் கல்லூரி கூறுகிறது. “இந்த ஆய்வின் முடிவுகள் உள்ளுணர்வூட்டுவது. புதுமையானது. நம்மை தானியங்கி உல கிற்குள் அழைத்துச் செல்கிறது” என்று யு கேயைச் சேர்ந்த முன்னணி ரோபாட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஜான் மெக்ராத் (John McGrath) கூறுகிறார். உலகின் தலைசிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் போலவே ரோபாட்டுகள் பெருமள வில் அறுவைசிகிச்சை செய்யும் வாய்ப்பை இது ஏற்படுத்தித்தருகிறது. பித்த நீரை (Bile) செரிமானத்திற்கு உதவுவதற்காக சுரக்கும் பித்தப் பை போன்ற மிருதுவான திசுக்களை கையாளும் இந்த த்தொழில்நுட்பத்தின் திறன்கள் கணினி மூலம் நடைபெறும் நரம்பி யல் வலை அமைப்புகளை சார்ந்துள்ளன. இது பரவலாகப் பயன்படுத்தப்படும் சாட் ஜிபிடி (Chat GPT) அல்லது கூகுள் ஜெமினி (Google Gemini) போன்ற செயற்கை நுண்ணறி வுத் தொழில்நுட்பக் கருவிகள் போன்றதே. அறுவைச் சிகிச்சை செய்யும் ரோபாட்டுகள்  மனித மருத்துவர்களை விட சிறிது மெது வாகவே சிகிச்சை செய்கின்றன. ஆனால் அவை குறைவான பதற்றத்துடன் சிகிச்சையை மேற்கொள்கின்றன. இலக்கை அடைவதற்கு குறுகிய பாதைகளை பின்பற்றுகின்றன. தவறுகளை மீண்டும் மீண்டும் திருத்து கின்றன. உடல் உள்ளமைப்பு வேறுபாடு களுக்கேற்ப கருவிகளை கோருகின்றன. இது பற்றிய ஆய்வுக் கட்டுரை இத்துறையைச் சேர்ந்த நிபுணர்களால் ஆராயப்பட்டு சயன்ஸ் ரோபாட்டிக்ஸ் (Science Robotics) என்ற இதழில் வெளிவந்துள்ளது. கிளினிக்கல் முறை யில் இந்த தானியங்கி அறுவைசிகிச்சை செயல்முறைகள் ஒரு மைல்கல் என்று ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ், ஸ்டான்போர்டு (Stanford) மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக நிபுணர்கள் கூறுகின்றனர். ஐந்து நிமிடத்தில் நிகழ்ந்த அறுவைசிகிச்சை இங்கிலாந்தில் தேசிய மருத்துவ சேவை (NHS) அமைப்பினால் ஒரு ஆண்டில் நடத்தப்  படும் அனைத்து 70,000 ரோபாட்டிக் செயல்முறை களும் மனித அறிவுரைகளால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. இடுப்பு மற்றும் முட்டி எலும்புகளை நீக்கும் அறுவைகள் மட்டும்  பகுதியளவு தானியங்கி முறையில் நடைபெறு கின்றன. பத்தில் ஒன்பது அறுவைகளும் ரோபாட்டுகளால் நடத்தப்படும் என்று என் ஹெச் எஸ் கூறுகிறது. இது இப்போது ஐந்தில் ஒன்றாக உள்ளது. ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் சோதனையில் அறுவையை நிகழ்த்த ரோபாட் ஐந்து நிமி டங்களுக்கு சற்று கூடுதலான நேரத்தை மட்டுமே எடுத்துக்கொண்டது. 17 வெட்டு தல்கள் உட்பட இந்த அறுவையில் பித்தப் பையை கல்லீரலில் இருந்து நீக்கும் செயலும் நடைபெற்றது. இதில் வரிசைப்படி ஆறு இணைப்புகள் மூலம் உறுப்பு அகற்றப்பட்டது. மனிதர்களின் உதவியின்றி ரோபோட்டுகள் ஆறு முறை அறுவையின் போது ஏற்பட்ட பிழைகளைத் திருத்திக்கொண்டன. “இதன் மூலம் ஒரு அறுவைச் செயல்முறை யை முழு தானியங்கி முறையில் நடத்த முடிந்தது. முதற்கட்டத்தில் சில தையல்கள் ரோபாட்டுகளால் செய்யப்பட்டன. பிறகு இங்கு நடத்தப்பட்டது. முழுமையான செயல்  முறை. எட்டு பித்தப்பைகள் வெற்றிகரமாக நீக்கப்பட்டன. கடினமான, மென்மையான திசுக்  களை தானியங்கி முறையில் ரோபாட்டுகளால் அகற்ற முடிந்தது என்பதால் இது ஒரு மைல்கல் ஆய்வு” என்று ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் இயந்திரவியல் துறை துணைப் பேராசிரியர் ஆக்ஸல் க்ரீஜர் (Axel Krieger) கூறுகிறார். “ரோபாட்டிக் அறுவைகள் நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் ஆகும் என்றாலும் ஒரு  நாள் மனித அறுவை நிபுணர் பல ரோபாட்டிக் அறுவைசிகிச்சைகளை ஒரே நேரத்தில் மேற்பார்வையிடமுடியும். அப்போது ரோபாட்டு கள் ஹிரன்யா அல்லது பித்தப் பை அறுவை சிகிச்சைகளை துரிதமாக மனிதனை விட துல்லி யத்தன்மையுடன் சுற்றிலும் இருக்கும் உடல்  அமைப்புகளுக்கு குறைவான சேதத்துடன் மேற்கொள்ளும். ஆனால் இந்த சிகிச்சைகளை கிளினிக்கல் முறையில் கொண்டு வர நீண்ட காலம் பிடிக்கும். ஏனென்றால் இறந்த பன்றி உறுப்புகளில் நடந்த பரிசோதனைகள் மனிதனிடம் நடத்தப் படும் பரிசோதனைகள் போல் அல்ல. மனித னின் நகர்வுகள், சுவாசம், இரத்தம் வருதல், எதிர்பாராத காயம், தீக்காயத்தில் இருந்து புகை வருதல் போன்றவற்றை ரோபாட்டுகள் கையாளும், பதில்வினை புரியும் திறன் பற்றி பரிசோதனைகள் நடத்தப்படவில்லை” என்று என் ஹெச் எஸ் ரோபாட்டிக்ஸ் மேம்பாட்டுக் கமிட்டி தலைவருமான ஜான் மெக்ராத் கூறு கிறார். நாளை ரோபாட்டுகள்  அறுவை சிகிச்சை செய்யும்போது “இதற்கு அடுத்தபடி துரிதமாக வளர்ந்து வரும் இப்புதிய துறையில் இந்த கண்டு பிடிப்பின் நுணுக்கங்கள் எவ்வாறு பாதுகாப்பு டன் மனிதர்களில் நிகழ்த்துவது என்பது பற்றி ஆராயப்படும். அப்போது மட்டுமே இந்த  அணுகுமுறை வருங்காலத்தில் நீடித்த நிலை யான வளர்ச்சிக்கு உதவுவதாக அமையும். பயிற்சி, கல்வி, நோயாளியின் பாதுகாப்பு ஆகி யவை முக்கியமானவை” என்று ராயல் ரோபாட்டிக்ஸ் அறுவைசிகிச்சை நிபுணர்கள் பிரிவின் தலைவர் நுஹாயாசின் (Nuha Yassin) கூறுகிறார். நாளை ரோபாட்டுகள் நடத்தும் அறுவைசிகிச்சைகள் சாதாரண நிகழ்வுகளா கும்போது நோயாளிகளின் நீண்ட காத்திருப்புக்  காலம் பெருமளவில் குறையும். இந்த கண்டு பிடிப்பு இத்துறையில் ஒரு புதிய மறு மலர்ச்சியை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.