வருவாய்த்துறையினர் தொடர்ந்து போராட்டம்
வருவாய்த்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வியாழனன்று (பிப். 26) இரண்டாவது நாளாகக் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. வருவாய்த்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
