tamilnadu

வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 48,696 கோடி

வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 48,696 கோடி

2026-27ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 48 ஆயிரத்து 696 கோடியே 32 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  வரி வசூலை மேம்படுத்துதல், வரி வசூல் நிர்வாகத் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு, வருவாய்ப் பற்றாக்குறை 2027-28 ஆம் ஆண்டில் 42 ஆயிரத்து 964 கோடியே 61 லட்சம் ரூபாயாக குறையும் எனவும், அதன் தொடர்ச்சியாக 2028-29 ஆம் ஆண்டில் 35 ஆயிரத்து 115 கோடியே 33 லட்சம் ரூபாயாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கூடுதல் மூலதனச் செலவினத்திற்கு வழிவகை செய்யும். 2026-27ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பில் நிதிப்பற்றாக்குறையின் விகிதம் 200 சதவிகிதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது பொருளாதாரம் மற்றும் நிதிநிலையில் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையிலும், நிதிநிலையை மேம்படுத்துவதில் அரசிற்கு உள்ள உறுதிப்பாட்டை வெளிக்காட்டுகிறது. 2027-28 மற்றும் 2028-29 ஆம் ஆண்டுகளில், பற்றாக்குறையானது முறையே, 288 சதவிகிதம் மற்றும் 230 சதவிகிதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.  இது, தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டம், 2003-இல் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கிற்குள் உள்ளது. ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளன. 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு 178,308.05 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெறத் திட்டமிட்டுள்ளது. மேலும், 60,418,42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2027 அன்று நிலுவையில் உள்ள கடன் 10,71,770.34 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 2020-27 ஆம் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 20:35 சதவிகிதம் ஆகும்.