tamilnadu

img

ஒளிரும் வேகத்தடை அமைக்க கோரிக்கை

ஒளிரும் வேகத்தடை அமைக்க கோரிக்கை

அய்யம் பேட்டை அடுத்த பசுபதி கோவில், கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் மூன்று இடங்களில் ஐந்து அடுக்கு வேகத் தடைகள் அமைக்கப் பட்டுள்ளன.  இதனால் இந்தச் சாலையில் புதிதாக வரும் வாகன ஓட்டிகள், வேகத் தடை அருகில் வந்ததும் தடுமாறுகின்றனர். இரவு நேரங்களில் வேகத் தடை இருப்பதை கவனிக்காத வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.  இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், பசுபதி கோயிலில் தஞ்சாவூர் - கும்பகோணம் மெயின் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி, அரசு உதவிப் பெறும்  பெண்கள் மேல் நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி உள்ளன. இங்கு வேகத் தடை இருப்பது புதிதாக வருபவர்களுக்கு, குறிப்பாக இரவு நேரங்களில் வருபவர்களுக்குத் தெரியாது. வேகத் தடையை அடையாளப் படுத்தும் வகையில் அறிவிப்புப் பலகை எதுவும் அமைக்கவில்லை. இதில் நோயாளிகள்,  கர்ப்பிணிகள் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது சிரமப் படுகின்றனர்.   அரசு, தனியார் ஆம்புலன்ஸ்கள் சென்று வருகின்றன. அதில் உள்ள  நோயாளிகளும் அவதிக்கு ஆளாகின்றனர். கும்பகோணம் அடுத்த தாராசுரம் அருகே, இரண்டு இடங்களில் மூன்று அடுக்கு வேகத் தடை அமைத்துள்ள நிலையில், பசுபதி கோயிலில் ஐந்து அடுக்கு வேகத் தடையை எடுத்து விட்டு, ஒரே வேகத் தடையாக, ஒளிரும் வகையில் போட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.