tamilnadu

கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி முழுவதும் கண்டன இயக்கம்

கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி    புதுச்சேரி  முழுவதும் கண்டன இயக்கம் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி  புதுச்சேரி  முழுவதும்   கண்டன இயக்கம்  நடத்த  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் எஸ். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள  அறிக்கை வருமாறு: பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மக்கள் விரோதக் கொள்கை களை தொடர்ந்து கடைபிடித்து வரு கிறது. அதனுடைய தொடர்ச்சியே மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி இருக்கிறது. மேலும் மக்கள் ஒற்றுமையை சிதைக்கும் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது. இவை இரண்டையும் எதிர்த்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி நாடு தழுவிய அளவில், அனைத்து ஜனநாயக இயக்கங்களையும், மக்களையும் போராட வேண்டுகோள் விடுத்தி ருக்கிறது. ஒரு வார கால இயக்கம்  ஏற்றப்பட்டிருக்கும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஏப்ரல் 12ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு புதுச்சேரி மாநிலம் முழுவதும் 30 மையங்களில், கண்டன இயக்கங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்த விருக்கிறது. ஏப்ரல் 12ஆம் தேதி காலை  புதுச்சேரி காமராஜ் சிலை அருகில் இந்த இயக்கம் தொடங்குகிறது.  சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலை குறைந்து வரும் நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி ஏற்கனவே விலைவாசி உயர்வாலும், வேலையின்மையாலும் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையில் இந்த விலை உயர்வு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.  சர்வதேச அளவில் கச்சா பொருளின் விலை வீழ்ச்சியினால்  ஏற்படும் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு பதிலாக, “சிறப்பு கலால் வரி” என்ற பெயரால் கூட்டாட்சிக் கோட்பாடுகளை மீறி வருவாய் அனைத்தையும் ஒன்றி யத்திற்கே திசை திருப்பி இருக்கிறது.  எனவே ஏற்றப்பட்ட விலை களை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி மாநிலம் முழுவதும் மக்கள் இயக்கங்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்துகிறது. வக்பு திருத்தச் சட்டம்  ஏப்ரல் 17 அன்று புதுச்சேரி முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகில், இஸ்லாமியர்களின் உரிமை களைப் பறிக்கும், சகோதரத்துவத்தைச் சீர்குலைக்கும் வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், “பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்’ நடைபெற உள்ளது.  நீண்டகால பயன்பாட்டின் மூலம் வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட ஆயிரக்கணக்கான வக்பு சொத்துகளை அபகரித்துக் கொள்வதற்காகவும், மக்களை  பிளவுபடுத்தும் நோக்கில், இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை விரைவாகக் கொண்டு செல்ல வும் இத்தகைய திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றியிருக்கிறது. நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ,இடதுசாரி ஜனநாயக சக்தி களும் இதற்கு எதிராக வலுவான குரல் கொடுத்திருக்கிறார்கள். வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி,  தெருவில் இறங்கி போராட சமூக நல்லிணக்கத்தை விரும்பும்  அனைவரையும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.  இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.