tamilnadu

img

யானைகளை அறிய வேழம் இயலியல் பூங்கா தடைபட்ட பணிகள் மீண்டும் துவக்கம்

யானைகளை அறிய வேழம் இயலியல் பூங்கா தடைபட்ட பணிகள் மீண்டும் துவக்கம்

யானைகளின் முக்கியத்துவம் குறித்து  பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில்  மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில்  அமைக்கப்பட்டு வந்த வேழம் இயலியல் பூங்கா நிதி ஒதுக்கீடு காரணமாக தடை பட்ட நிலையில், மீண்டும் பணிகள் துவங்கப் பட்டு உள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் -  கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறை மரக்கிடங்கு வளாகத்தில் கடந்த 2020-21 ஆம் ஆண்டு வேழம் இயலியல் பூங்கா அமைக் கும் பணி துவங்கப்பட்டது. பாதியளவு பணி கள் நடைபெற்று முடிந்த நிலையில் நிதி பற்றாக்குறையால் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது தமிழக அரசு சார்பில் ரூ.14 லட் சம் இத்திட்டப் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்ட தால், பாதியில் நிறுத்தப்பட்டிருந்த வேழம் இயலியல் பூங்கா பணிகளை வனத்துறை மீண்டும் துவக்கியுள்ளது. இந்த இயலியல் பூங்காவின் உள்ளே உல கில் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து கொண்டுள்ள பல்வேறு இன யானைகளின் சுவரோவியங் கள் அவற்றின் பெயர்கள், வாழ்விடம் மற்றும் வாழ்ந்த காலங்கள் போன்ற பல விபரங்க ளோடு காட்சிப்படுத்தும் பணி நடைபெற்று  வருகிறது. பண்டைய காலத்தில் யானைகள் எவற்றுக்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது, இலக்கியம் மற்றும் நமது கலாச்சாரத்தில் யானைகளின் பங்கு எவ்வாறு இருந்தது என் பதை விளக்கும் வகையில் ஓவியங்கள் வாயி லாகவும் உருவ மொம்மைகள் மற்றும் அரிய புகைப்படங்கள் வாயிலாகவும் விளக்கப்பட் டுள்ளது. யானை - மனித மோதல்கள் அதிக ரித்து இரு தரப்பிலும் இழப்புகள் ஏற்பட்டு  வரும் நிலையில் பொதுமக்கள் யானைகளை பற்றியும் அவற்றின் குணாதிசயங்கள் குறித் தும் தெரிந்து கொள்வதற்காக மையத்தை சுற்றி திறந்தவெளி விழிப்புணர்வு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதனை வனத் துறை உயரதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு  செய்து பணிகளை முடுக்கி விட்டு வருகின்ற னர்.  இந்த இயலியல் பூங்கா பணிகள் நிறை வடைந்தவுடன் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானை என்ற பேரு யிர் மனிதனுக்கு எதிரி அல்ல இயற்கை சங்கி லியில் முக்கிய அங்கம் அதன் இயல்பை யும் முக்கியத்துவத்தையும் புரிந்து கொண் டால் பெருமளவு மோதல்கள் தவிர்க்கப் படும். இதற்கு வேழம் போன்ற யானைகள் இயலியல் பூங்கா பெருமளவு உதவிடும் என் பது வன உயிரின ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.