ஆளுநருக்கு எதிரான சட்டப்போராட்டம் முதலமைச்சருக்கு சிபிஎம் தலைவர்கள் வாழ்த்து
ஆளுநர் ரவி இனியும் பதவியில் நீடிப்பது முறையற்றது. அவரை உடனடியாக ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வியாழனன்று (ஏப்,10) தலைமை செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களி டம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: சட்டமன்றத்தால் நிறைவேற்றப் பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி சில ஆண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டம் நடத்தியது. அதன் பேரில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. மசோ தாக்களை ஆளுநர் முடக்கி வைத்தது சட்ட விரோதம் என்று சொன்னதோடு, அவற்றிற்கு உச்ச நீதிமன்றமே நேரடியாக ஒப்புதல் வழங்கி இருபது இதுவரை வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய சிறப்பு அம்சம். காலவரம்பில்லாமல் மசோதாக்களை முடக்கி வைப்பது சட்டவிரோதம். அவற்றிற்கு எவ்வளவு காலத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்துள்ளது. இந்த தீர்ப்பால் இந்தியா முழுவதும் உள்ள மாநில சட்டமன்ற உரிமைகள், கூட்டாட்சி தத்துவம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம். இந்த சட்டப்போராட்டத்தை நடத்திய முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டுள்ளார் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த நிலையில் இனியும் ஆளுநர் பதவியில் நீடிப்பது முறை யற்றது. அவரை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்றது. மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெற்ற கருத்தரங்கில் முதலமைச்சர் கலந்து கொண்டு பேசினார். சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை அமைக்கப்படும் என்று அறி வித்ததற்காகவும் நன்றி தெரிவித்தோம். இவ்வாறு அவர் கூறினார். இதன்பின் செய்தியாளர்களின் கேள்வி களுக்கு பதிலளித்த அவர், பொது இடங்க ளில் உள்ள கட்சி, அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற நீதிமன்றம் உத்தர விட்டிருப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமையை பறிக்கும் வகையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆலோசித்து வருகிறோம் என்றார். பாஜகவின் தலையாட்டி பொம்மை பாஜகவின் தலையாட்டி பொம்மையாக அதிமுக மாறிவிட்டது. நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டுமென்று அதிமுகவே தீர்மானம் போட்டுள்ளது. நீட் தேர்வு எதிர்ப்பு நீண்ட நெடிய போராட்டமாக உள்ளது. நேற்று வரை வந்துவிட்டு இன்று வரமாட்டேன் என்று அதிமுக கூறியதில் நியாயமில்லை. மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் ஏப்.9 அன்று நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்பது தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு இருக்க வேண்டும். பாஜக வுடன் ரகசிய பேரம் பேசும் நிலையில், அரசியல் தேவைக்கு மக்கள் நலனை காவு கொடுகின்றனர் என்றும் அவர் விமர்சித்தார். சாம்சங், அடாவடி பாமகவில் நடப்பது அந்தக் கட்சியின் உள்விவகாரம். அதில் என்ன கருத்து சொல்ல முடியும் என்றார். பன்னாட்டு நிறுவனமான சாம்சங், அடாவடித்தனமான போக்கை மேற்கொள்கிறது. பதிவு செய்யப்பட்ட, பெரும்பான்மையாக உள்ள தொழி லாளர்களின் சங்கத்தை அங்கீகரித்து பேச வேண்டும். தொழிலாளர்கள் போராட் டத்தை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. பெரும்பான்மையான தொழிலாளர்கள் உள்ள சங்கத்தை அங்கீகரிக்க வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.