பரலூர் ஊராட்சியில் பொது நூலகம் காணொலி மூலம் முதல்வர் திறப்பு
செம்பனார்கோவில் வட்டார த்திற்குட்பட்ட பரசலூர் ஊராட்சியில், சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் ரூ.22 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொது நூலக கட்டடத்தை வெள்ளியன்று, தமிழக முதல்வர், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்கழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.ருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டங்கள் மற்றும் பொதுநூலக கட்டடங்களை காணொலி மூலம் திறந்து வைத்த முதல்வர், மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட பரசலூர் ஊராட்சியில் ரூ.22 இலட்சம் மதிப்பில் பொது நூலக கட்டடமும், அதேபோல், குத்தாலம் வட்டாரத்திற்குட்பட்ட கோமல் ஊராட்சியில் ரூ.22 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொது நூலகத்திற்கான இணைப்பு கட்டடத்தையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) முகம்மது ஷபீர் ஆலம், மாவட்ட நூலக அலுவலர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, மஞ்சுளா மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.