கேஸ் விலை உயர்வை கண்டித்து மாதர், வாலிபர் நூதனப் போராட்
திருச்சிராப்பள்ளி, ஏப்.11- சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பாஜக அரசு உர்த்தியதைக் கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து, வெள்ளியன்று திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் முக்காடு அணிந்து அதனைச் சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லெனின், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பொன்மகள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பகுதிச் செயலாளர்கள் தர்மா, விஜயேந்திரன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் சார்லஸ், மாவட்ட துணைத் தலைவர் ஜோன்ஸ், சங்க நிர்வாகிகள் ராகிலா, நவநீதகிருஷ்ணன், ஹாஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். குடவாசல் குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் கண்டன உரையாற்றினார். குடவாசல் நகரச் செயலாளர் டி.ஜி. சேகர், ஒன்றியச் செயலாளர் டி. லெனின் ஆகியோர் தலைமை தாங்கினர். திருவாரூர் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் நகரச் செயலாளர் எம்.டி. கேசவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி கண்டன உரையாற்றினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.கோமதி மற்றும் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே. என். அனிபா, செயலாளர் இரா. மாலதி, பொருளாளர் கே. கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், திருவாரூர் ஒன்றியம் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுந்தரய்யா தலைமை ஏற்றார். நன்னிலம் நன்னிலம் ஒன்றியம் பேரளம் கடை வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாகு. ரஜினிகாந்த், பேரளம் நகரச் செயலாளர் ஜி.செல்வம் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடவாசல் வடக்கு ஒன்றிய எரவஞ்சேரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கே.அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் கண்டன உரையாற்றினார். வலங்கைமானில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் டி. சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி கண்டன உரையாற்றினார். இதேபோல் மாவட்டம் முழுவதும் கேஸ் விலை உயர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று விலை உயர்வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். முத்துப்பேட்டை முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி தலைமையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்டக் குழு உறுப்பினர் சி. செல்லத்துரை மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளி்ட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு உரையாற்றினார். மன்னார்குடி மன்னார்குடி ஒன்றிய நகரக் குழுக்களின் சார்பில், பெரியார் சிலை எதிரில் நகரச் செயலாளர் தாயுமானவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் கே. ஜெயபால், கட்சியின் மூத்த தோழர்கள் டி.ஜெகதீசன், ஜி. ரகுபதி ஆகியோர் பேசினார்கள். நகரக்குழு உறுப்பினர்கள் கே. பிச்சைக்கண்ணு, டி. சந்திரா, எஸ். சகாயராணி, ஜி. மாரிமுத்து, ஆட்டோ சங்கச் செயலாளர் ஆ. அரிகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு பிரகாஷ் கண்டன உரையாற்றினார். கோட்டூர் புதிய நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம், ஒன்றியச் செயலாளர் கே. கோவிந்தராஜ் தலைமையில் நடைறெ்றது. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எல். சண்முகவேலு, ஆர். பாலுசாமி, எம். செல்லதுரை, பி. சுப்பிரமணியன் மற்றும் கிளைச் செயலாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தமிழ்மணி கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.