வானிலை மாற்றத்தால் கடலுக்குச் செல்ல தடை மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை
சென்னை, நவ.17 - தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி முதலமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது: ‘தரை மேல் பிறக்க வைத்தாய் எங்களை கண்ணீரில் மிதக்க விட்டாய்’ என்பது போல் மீனவர்களின் வாழ்க்கை அவல நிலை யில் இருந்து வருகிறது. இயற்கை விதி களில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக கடலில் ஏற்பட்டு வரும் இயற்கை சீற்றங்களின் விளைவாக பேராபத்துகளை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில மீன வர்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு கட லில் மீன் பிடிப்பதை தொடர்ந்து பல முறை தடை செய்து வருகிறது. தமிழ்நாட்டின் வானிலை அறிக்கைப் படி மீன்பிடி தடை செய்வதால் அன்றாட வாழ்க்கை நடத்த மீன்பிடிக்க செல்ல முடி யாமல் பெரும் பொருளாதார நெருக்கடி யில் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக மீனவர்களின் அத்தியாவசிய தேவைகளைக்கூட பூர்த்தி செய்வதற்கு பணம் இல்லாமல் மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த ஆண்டு பல வாரங்களாக, பெரும்பாலான மாவட்டங்களில் கடலில் ஆரஞ்சு அலர்ட், மஞ்சள் அலர்ட், சிவப்பு அலர்ட் மற்றும் புயல் கூண்டு நம்பர் 1, நம்பர் 2 என ஏற்றப்பட்டு மீன்பிடிக்கச் செல் வது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு பாதி நாட்கள்கூட மீன்பிடிக்கச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இப்பேற்பட்ட காலங்களில் வருமானம் இல்லாமல் வாழ்ந்து வரும் மீன வர்களை பாதுகாப்பது அரசின் கடமையா கும். இவைகளை கருத்தில் கொண்டு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் மீனவர்களை பாதுகாக்கத் தேவையான நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டு கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.