tamilnadu

லெனின் சிலை முன்பு செந்தொண்டர் அணிவகுப்பு ஒத்திகை

லெனின் சிலை முன்பு செந்தொண்டர் அணிவகுப்பு ஒத்திகை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாட்டையொட்டி, மதுரையில் ஏப்ரல் 6 அன்று 25 ஆயிரம் செந்தொண்டர்களின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதில், திருநெல்வேலி மாவட்டக்குழு சார்பில் பங்கேற்கும் செந்தொண்டர்களுக்கான அணிவகுப்பு ஒத்திகை, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. அணிவகுப்பிற்கு மாவட்டச் செயலாளர் க. ஸ்ரீராம் தலைமை தாங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் ஆர். கருமலையான் ஒத்திகையைத் துவக்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் கேஜி. பாஸ்கரன் மற்றும் மாவட்ட செயற்குழு - மாவட்டக்குழு உறுப்பினர்கள், தாலுகா - ஒன்றியம் மற்றும் இடைக்கமிட்டி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.