tamilnadu

img

எரிக்கப்பட்ட நிலையில் சிறுமி உடல் மீட்பு

சமீபத்தில் திருச்சியில் ஒரு சிறுமி எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மதுரையில் எரிந்த நிலையில் ஒரு சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் குண்டாறு ஓடைக்கு அருகில் ஒரு சிறுமியின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து
காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.