tamilnadu

img

எஸ்ஐஆர் அடாவடி வாக்குரிமையை இழக்கும் ரத்தன் சுக்லா

எஸ்ஐஆர் அடாவடி வாக்குரிமையை இழக்கும் ரத்தன் சுக்லா

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், மேற்கு வங்க அணியின் பயிற்சியாளருமான லட்சுமி ரத்தன் சுக்லா, விஜய் ஹசாரே டிராபி தொ டருக்காக குஜராத் மாநிலம் ராஜ் கோட்டில் உள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரராக இருந்தாலும், வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு (எஸ்ஐஆர்) பின்பு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில் ஜனவரி 7ஆம் தேதி ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் மேற்கு வங்க அணியுடனான தொழில்முறை கடமைகள் காரணமாக அவரால் கலந்துகொள்ள முடிய வில்லை. விசாரணையில் கலந்து கொள் ளாததால் அவரது வாக்குரிமை பறி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டுக் காக கிரிக்கெட் விளையாடிய ரத்தன் சுக்லாவிற்கு நோட்டீஸ் அனுப்பியதே பெரும் தவறு என நாடு முழுவதும் கண்ட னங்கள் குவிந்து வந்த நிலையில், தற்போது அவரது வாக்குரிமை பறிபோ கும் நிலைமையில் இருப்பது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.