states

img

இதிலும் தாமரையா?

இதிலும் தாமரையா?

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது பிரிக்ஸ் (BRICS - நாடுகளின் முதல் எழுத்துகளின் சுருக்கம்) அமைப்பு.  இதில் புதிதாக எகிப்து, எத்தியோப்பி யா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. 2025ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது.  இந்நிலையில், 2026ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 18ஆவது மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் தலைமைத்து வத்தை ஏற்றுள்ள இந்தியா, புதிய இலச்சினை மற்றும் பிரத்தியேக இணைய தளத்தை அறிமுகம் செய்தது. ஆனால் இலச்சினை பாஜகவின் சின்ன மான “தாமரை” வடிவில் அமைக்கப் பட்டுள்ளது. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.