states

img

மும்பை பிரச்சாரக் கூட்டம் வெளிமாநிலங்களில் இருந்து வாடகைக்கு ஆட்களை அழைத்து வந்து சமாளிக்கும் பாஜக

மும்பை பிரச்சாரக் கூட்டம் வெளிமாநிலங்களில் இருந்து வாடகைக்கு ஆட்களை அழைத்து வந்து சமாளிக்கும் பாஜக

மும்பை ஜனவரி 15 ஆம் தேதி மும்பை (மகாராஷ்டிரா) மாநக ராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி 2 நாட்களுக்கு முன் மும்பையில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் ஆயி ரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆனால் பங்கேற்றவர்கள் பெரும் பாலானோர் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த வர்கள் இல்லை என எதிர்க்கட்சி கள் குற்றம்சாட்டின. இந்நிலையில், மும்பை பிரச்சா ரக் கூட்டத்திற்கு ஆட்கள் கிடைக்கா மல் மத்தியப்பிரதேசம், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கூலி அடிப்படையில் வாடகைக்கு ஆட் களை அழைத்து வந்து பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சமாளித்துள்ளன. இதற்காகப் பல ரயில்கள் மற்றும் பேருந்து கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள தாகவும், அழைத்து வரப்படும் மக்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படுவதாகவும் “ஆஜ் தக் (AajTak)” ஊடகத்தின் வீடியோ மூலம் செய்திகள் வெளி யாகியுள்ளன.  மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரு கிறது. முதலமைச்சராக பாஜகவின் பட்னாவிஸ், துணை முதல மைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா), அஜித் பவார் (தேசிய வாத  காங்கிரஸ்) உள்ளனர்.  ஆட்சியில் இருந்தும் மக்களின் ஆதரவு இல்லாததால், கூட்டத்தைக் கூட்டுவதற்காகப் பிற மாநிலங்களை பாஜக தலைமை யிலான கூட்டணி சார்ந்திருப்பதா கக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நக்கல், நையாண்டியுடன் விமர்சித்து வருகின்றன.