tamilnadu

img

நிதிப் பழிவாங்கலுக்கு எதிராக போராடும் கேரள மக்களோடு சிபிஎம் நிற்கிறது! அரசியல் தலைமைக்குழு அறிக்கை

நிதிப் பழிவாங்கலுக்கு எதிராக போராடும்  கேரள மக்களோடு சிபிஎம் நிற்கிறது! அரசியல் தலைமைக்குழு அறிக்கை

புதுதில்லி கேரளத்தின் உரிமைகளுக்காக கேரள முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் மக்கள் நடத்தியுள்ள சத்தி யாக்கிரகப் போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தமது ஒருமைப்பாட்டையும் ஆதர வையும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மக்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு, கேரளத்தின் சத்தி யாக்கிரகப் போராட்டத்திற்குத் தமது முழு மையான ஆதரவைத் தெரிவிப்பதுடன், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான ஒன்றிய அரசின் தாக்கு தலை முறியடிக்கவும் நடைபெறும் போராட்டத் தில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்து டன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நிற்கிறது. இந்தப் போராட்டம், மாநிலத்தின் மீதான ஒன்றிய அரசின் நிதிப் புறக்கணிப்பிற்கு எதிராகவும் நடத்தப்படுகிறது. ரூ. 57 ஆயிரம் கோடியை  வழங்காத மோடி அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒன்றிய அரசின் நிதிப் பாகுபாடு காரணமாக, கேரள அரசு 57,000 கோடி ரூபாய் அளவிற்கான மிகப்பெரிய வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளது. வரிப் பகிர்வு, மானியங்கள் மற்றும் திட்டங்களுக்கான நிதிகளில் கேரளத்திற்கான பங்கு குறைக் கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்ட விதிக ளைத் தவறாகப் புரிந்துகொண்டு, கேரளம் கடன் பெறுவதற்கும் கூட வரம்புகளும் கட்டுப் பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. நிதித்தடையை  ஏற்படுத்தி அரசியல் பழிவாங்கல் ஒன்றிய அரசாங்கத்தின் வரிப்பகிர்வில், கேர ளத்திற்கான பங்கு, 10ஆவது நிதிக் குழுவின் போது 3.875 சதவிகிதமாக இருந்தது. இது தற்போ தைய 15ஆவது நிதிக் குழுவில் வெறும் 1.925 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டில் மட்டும், கேரள மாநிலத்தி ற்கு 27,000 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி யுள்ளது. மாநிலத்திற்குச் சேர வேண்டிய பல தொகைகளைத் தராமல் ஒன்றிய அரசு நிலுவை யில் வைத்துள்ளது. இவை அனைத்தும் மாநிலத்தின் நிதிநிலைக்குக் கடுமையான தடைகளை ஏற்படுத்துகின்றன. சட்டப்படியான  நிதிப் பகிர்வையே கேட்கிறார்கள் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் ஆகிய இரண்டிலும் கேரள மாநிலம், ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. அந்த வகையில் கேரளம் தனக்குச் சட்டப் பூர்வமாகச் சேர வேண்டிய நிதியையே கோரு கிறது, ஒன்றிய அரசிடம் கருணை காட்ட வேண்டும் என்று கேட்கவில்லை. ஒன்றிய அரசு கேரளத்தின் நியாயமான கவலைகளைக் கவனத்தில் கொண்டு, மாநிலத்திற்கு எதிரான தனது நிதிப் பழிவாங்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அரசியல் தலைமைக் குழு வலியுறுத்துகிறது. தங்கள் முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களின் தலைமையில், சத்தி யாக்கிரகப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்கும் கேரள மக்களுக்கு அரசியல் தலை மைக் குழு தனது வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.