அரசு ஊழியர்-ஆசிரியர் ஓய்வூதிய சிக்கலுக்கு தீர்வு கண்டமைக்கு பாராட்டு தொழிலாளர் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரிடம் சிபிஎம் தலைவர்கள் முறையீடு!
சென்னை, ஜன. 13 - முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மாநி லச் செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், டி. ரவீந்திரன் ஆகி யோர் சென்னை தலைமைச் செயல கத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.13) அன்று நேரில் சந்தித்தனர். அப்போது, தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கால் நூற்றாண்டுக் கோரிக்கை யான ஓய்வூதியப் பிரச்சனைக்கு தீர்வு கண்டமைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
அத்துடன், மாற்றுத் திறனாளி கள், விவசாயிகள், சத்துணவு ஊழியர்கள், சாலைப்பணியாளர் கள், மின் ஊழியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரி யர்கள் உள்ளிட்டோரின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் முதலமைச்சரிடம் முறையிட்டனர். சத்துணவு ஊழியர் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்! சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு, மிகக் குறைவாக இருக்கும் ஓய்வூதி யத்தை உயர்த்தி வழங்க உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக கணக்கிட்டு உரிய பலன்களை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மின் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்க! 2021-ஆம் ஆண்டு மின்வாரி யத்தில் கேங்மேனாக பணியில் இணைந்தவர்களுக்கு, கள உதவி யாளர்களாக பதவி மாற்றம் செய்திட வேண்டும், மின்வாரி யத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேசி சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும், கல்லூரி பேராசிரியர் களின் பணி மேம்பாட்டு ஊக்குவிப்பு ஊதியம் வழங்கப்படாமலிருக்கும் பகுதியினருக்கு அவற்றை உட னடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை களை வலியுறுத்தினர்.
ஸ்மார்ட் மீட்டரை கேப்பக்ஸ் திட்டமாக செயல்படுத்த வேண்டும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4000 கொள்முதல் விலை வழங்கப்பட வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்ட த்தை, கேரள மாநில அரசாங்கம் போன்று கேப்பக்ஸ் திட்டமாக செயல்படுத்த வேண்டும், சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வ நாததாஸ் அவர்களுக்கு மணிமண்ட பம் அமைத்திட வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டுமென வலியுறுத்தி னர். நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதி! அனைத்துக் கோரிக்கைகளை யும் கவனமாக கேட்டுக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா. முரு கானந்தம், நிதித் துறைச் செயலா ளர் த. உதயச்சந்திரன், முதலமைச்ச ரின் முதன்மைச் செயலாளர்கள் பி. உமாநாத், எம்.எஸ். சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
