உத்தரகண்டில் நிலநடுக்கம்
இமயமலைச் சாரலில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 8 மாதங்களாக அடிக்கடி மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வரு கிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று உத்தரகண்டின் பாகேஷ்வர் மாவட்டத்தில் காலை 7.25 மணியளவில், 3.5 ரிக்டர் அளவில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த மிதமான நில நடுக்கத்தால் அச்சமடைந்த பாகேஷ் வர் மாவட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்ச மடைந்ததாக மாவட்ட பேரிடர் மேலா ண்மை அலுவலகம் மூலமாக செய்தி கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பாகேஷ்வர் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி ஷிகா சுயால் கூறுகையில்,“பாகேஷ்வர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கப்கோட் நகருக்கு அருகே இந்த நில நடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது. உயிர்ச் சேதமோ அல்லது சொத்துக்க ளுக்குப் பாதிப்போ ஏற்பட்டதாக எந்தத் தகவலும் வரவில்லை” என அவர் கூறினார்.
