tamilnadu

மதுரை முக்கிய செய்திகள்

95 கோவில்களுக்கு ராஜகோபுரம்

சென்னை: சட்டமன்றத்தில் பாமக உறுப்பினர் எஸ்.சதாசிவம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “சேலம் மாவட்டம், மேட்டூர் முருகன் கோவிலில் ரூ.2.16 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்து விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும். அதேபோல், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை முழுமையாக முடித்து வரும்  ஜூலையில் குடமுழுக்கு நடத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் இது வரைக்கும் ரூ.1215 கோடி செலவில் 95 கோவில்களுக்கு ராஜ கோபுரம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரூ.85 கோடி செல வில் 350 இடங்களில் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்றுள்ளன” என்றார்.

ஜாமீன் மனு  மீண்டும் தள்ளுபடி

மதுரை: 2020 ஆம் ஆண்டில் சாத்தன்குளம் தந்தை – மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில்,  சிறையில் உள்ள முன்னாள் எஸ்.ஐ.ரகு கணே சனின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி  செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது. வழக்கின் விசாரணையை 2 மாதங் களில் முடிக்கவும் கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் வேலைநிறுத்தம்

நாமக்கல்: ஆயில் நிறுவனங்கள் அறிவித்துள்ள புதிய  டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேஸ் டேங்கர் லாரி  உரிமையாளர்கள் வியாழனன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்து அறிவித்து உள்ளனர். தென் மாநிலங்களில் இயக்கப்பட்டு வரும்  சுமார் 4 ஆயிரம் கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப் பாடு ஏற்படும்.