tamilnadu

img

மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் புதுக்கோட்டை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
புதுக்கோட்டை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான விளை யாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சியர் மு.அருணா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.  பின்னர் அவர் பேசுகையில், “பெண்  குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ், மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவி களுக்கான தனிநபர் தடகளப் போட்டிகள் (100மீ, 200மீ, 400மீ, 1500மீ, நீளம் தாண்டு தல், குண்டெறிதல், வட்டெறிதல், சிலம்பம்) மற்றும் குழு போட்டிகளில் கையுந்துபந்து, கபாடி போட்டிகள் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் முதல்  மூன்று இடங்களைப் பெற்ற வீராங்கனை களுக்கு பரிசுத்தொகையாக தலா ரூ.2000,  ரூ.1500 ரூ.1000 ரொக்கத்துடன், பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. மேலும் செவ்வாயன்று நடைபெற்ற  இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரிகளி லிருந்து சுமார் 517 மாணவிகள் கலந்து கொண்டனர்” என்றார். மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுல பிரியா, மாவட்ட விளையாட்டு மற்றும்  இளைஞர் நலன் அலுவலர் து.செந்தில் குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.