tamilnadu

காலியாக கிடக்கும் ரயில்வே இடம் பூங்கா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

காலியாக கிடக்கும் ரயில்வே இடம்
பூங்கா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தை அடுத்துள்ளது பாப நாசம் ரயில் நிலையம். பாபநாசம் ரயில் நிலை யத்தில் தினமும் 26 ரயில்கள் வந்துச் செல் கின்றன. வருடத்திற்கு ரூ.2 கோடி வருமானம் வருகிறது.  ரயில் நிலையத்தில் தரைத் தளத்தின் குறிப்பிட்ட பகுதி விரிசல் விட்டு உள்வாங்கத் தொடங்கியுள்ளது. இதை ரயில்வே நிர்வாகம் சீரமைக்க வேண்டும். இதேபோன்று மெயின் சாலையிலிருந்து ரயில் நிலையத்திற்குச் செல்லும் சாலையை ஒட்டி, ரயில்வேக்கு சொந்த மான இரண்டு ஏக்கர் அளவுள்ள இடம் காலி மனையாக கிடக்கிறது. இதில் தேவையற்ற செடி,  கொடிகள், புற்கள் மண்டி கிடக்கின்றன. மழை நாட்களில் காலி மனையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.  பாபநாசம் ரயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்துச் செல்கின்றனர். பாபநாசம் ரயில் நிலையத்திற்கு வருமானம் உள்ள நிலையில், காலி மனையாக உள்ள இடத்தைச் சுற்றி வேலி அமைத்து, மூலிகைச் செடிகள், புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கலாம்.  இந்த காலி இடத்தை சிலர் பொதுக் கழிவறையாகவும், திறந்தவெளி மதுக்கூடமாகவும் பயன்படுத்துகின்றனர். பாபநாசம் பகுதியில் பொழுது போக்கிற்கு வழியில்லாத நிலையில், ரயில்வே நிர்வாகம் காலி மனையில் பூங்கா அமைத்துக் கட்டணம் வசூலிக்கலாம். ரயில் பயணிகளுக்கும் இது பயனளிக்கும். இதன் மூலம் ரயில்வேக்கும் வருமானம் வரும். ரயில்வே நிர்வாகத்தால் முடி யாத பட்சத்தில் எம்.பி நிதி, தனியார் வங்கிகள், சேவை அமைப்புகளின் பங்களிப்புடன் இதை  மேற்கொள்ளலாம் என பொதுமக்கள் தெரிவிக் கின்றனர்.