குமரி மாவட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், காகித தணிக்கை இயந்திரம் வழங்கல்
நாகர்கோவில் .மார்ச் 23- தமிழ்நாடு சட்டமன்றதேர் தல்-2026 முன்னிட்டு சன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்ட மன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்தி ரங்களை வாக்குச்சாவடிகளுக்கு முதற்கட்ட குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும்பணி நடந்தது. 6 கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வைப்பறை யில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ள, கன்னியாகுமரி மாவட் டத்திற்குட்பட்ட சட்டமன்ற பொ துத்தேர்தலுக்கு பயன்படுத்தப் படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களை சட்ட மன்ற தொகுதி வாரியாக கணினி மூலம் முதற்கட்ட குலுக்கல் முறை யில் ஒதுக்கீடு செய்யும் பணி நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் அபுபக்கர் சித்திக், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் பிரியங்கா பாசு இங்டி, விள வங்கோடு சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் ஓம் பிரகாஷ் ராய், .கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் சுபாஸ்ரீ நந்தா,கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் மனோஜ் குமார், மாவட்ட தேர் தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர் .அழகு மீனா ஆகி யோர் தலைமையில், அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிர முகர்கள் முன்னிலையில், கன்னி யாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் திங்களன்று (23.03.2026) நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களிடையே தெரிவிக்கையில்:- நடைபெற வுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொ துத்தேர்தல் 2026 முன்னிட்டு, கன்னி யாகுமரி மாவட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 363 வாக்குச்சாவடிகளுக்கு 435 வாக்குச்சீட்டு இயந்திரம் , 435 கட்டுப்பாட்டு இயந்திரம் , 471 காகித தணிக்கை சோதனை இயந்திரங்க ளும் , நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 322 வாக்குச்சாவடி களுக்கு 386 வாக்குச்சீட்டு இயந்திரம், 386 கட்டுப்பாட்டு இயந்திரம் , 418 காகித தணிக்கை சோதனை இயந்திரங்களும் , குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 316 வாக்குச் சாவடி களுக்கு 379 வாக்குச்சீட்டு இயந்திரம் 379 கட்டுப் பாட்டு இயந்திரம் 410 காகித தணிக்கை சோதனை இயந்திரங்க ளும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 312 வாக்குச்சாவடிக ளுக்கு 374 வாக்குச்சீட்டு இயந்தி ரம், 374 கட்டுப்பாட்டு இயந்திரம், 405 காகித தணிக்கை சோதனை இயந்திரங்களும், கிள்ளியூர் சட்ட மன்ற தொகுதியில் 301 வாக்குச் சாவடிகளுக்கு 360 வாக்குச்சீட்டு இயந்திரம், 360 கட்டுப்பாட்டு இயந்திரம், 390 காகித தணிக்கை சோதனை இயந்திரங்களும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி யில் 300 வாக்குச்சாவடிகளுக்கு 361 வாக்குச்சீட்டு இயந்திரம், 361 கட்டுப்பாட்டு இயந்திரம் , 391 காகித தணிக்கை சோதனை இயந்திரங்க ளும்ஆக மொத்தம் 1914 வாக்குச் சாவடிகளுக்கு 2295 வாக்குச்சீட்டு இயந்திரம் 2295 கட்டுப்பாட்டு இயந்திரம் , 2485 காகித தணிக்கை சோதனை இயந்திரங்களை கணினி மூலம் முதற்கட்ட குலுக் கல் முறையில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மேலும், ஏதேனும் இயந்தி ரங்கள் செயலற்று இருந்தால், அவற்றிற்கு மாற்றாக பயன்படுத்த 381 வாக்குச்சீட்டு இயந்திரம், 381 கட்டுப்பாட்டு இயந்திரம், 571 காகித தனி சோதனை இயந்திரங் கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரி வித்தார்.
