tamilnadu

img

மதுக்கடை திறப்பை கண்டித்து தேனி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, மே 8- கொரோனா தொற்று அதி கரித்து வரும் நிலையில்  டாஸ்மாக் மதுக்கடையை திறந்து மக்களின் வாழ்க்கை யை பாழ்படுத்தும் மாநில அரசை கண்டித்தும் ,தமிழ கத்திற்கு தேவையான நிதி  தராத மத்திய பாஜக அரசை  கண்டித்தும் தேனி மாவட்ட த்தில் பல்வேறு இடங்களில்  கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டக்குழு, தாலு காக்குழு அலுவலகங்கள் மற்றும் சிஐடியு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.இதில் கட்சியின் மூத்த தலைவர் கே.ரா ஜப்பன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் சி.முருகன், தாலு காச் செயலாளர் சி.சடை யாண்டி, மாவட்டக்குழு உறு ப்பினர்கள்  பா.ராமமூர்த்தி, சி.முனீஸ்வரன், இ.தர்மர், தாலுகாக்குழு உறுப்பினர் வி.ராஜேந்திரன், கிளை ச்செயலாளர்கள் கருப்ப சாமி, பெத்தலீஸ்வரன்,எம்.முத்துக்குமார் மற்றும் சண்மு கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கம்பம்

கம்பம் ,கூடலூர் மற்றும்  கிராமப்புறங்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வு களில்  மாவட்டசெயற்குழு உறுப்பினர்  ஏ.வி .அண்ணா மலை, கம்பம் ஏரியாசெய லாளர் ஜி .எம் .நாகராஜன்  மாவட்டக்குழு உறுப்பி னர்கள்  பி .ஜெயராஜ் ,  கே ஆர். லெனின் ,ஏரியாக்குழு உறுப்பினர்கள்  பி. ஜெயன் ,கே.கர்ணன் , பி .அய்யப்பன் ,எஸ்.சின்னராஜ் , எஸ் .காஜாமைதீன் மற்றும் கிளை செயலாளர்கள்  பங்கேற்ற னர். போடி கட்சி அலுவல கத்தில் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்தில் தாலுகா செயலாளர்  எஸ்.செல்வம் ,மாவட்ட க்குழு உறுப்பினர் எஸ்.கே. பாண்டியன் ,மற்றும் விரு மாண்டி ,காமராஜ் ,பழ னிச்சாமி உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர் .

ஆண்டிபட்டி

ஆண்டிபட்டியில் கட்சி யின் தேனி மாவட்ட செயலா ளர் டி.வெங்கடேசன் தலை மையில் கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது .ஜக்கம்பட்டி ,ஜம்பு லிபுத்தூர் ,டி.சுப்புலாபுரம் ஆகிய இடங்களில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது .மாவட்ட  செயற்குழு உறுப்பினர் கே. தயாளன் ,ஒன்றிய செயலா ளர் எஸ்.ராமர் ,சி.பாலச்சந்தர் ,பி.டி.ராஜா .கே.கே.முருகன் ,சுப்புராஜ் ,அன்னலட்சமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாளையம் ஏரி யாக்குழு சார்பில் கோம்பை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் கட்சியின் ஏரியா செய லாளர் சி.வேலவன் ,மாவ ட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுருளிவேல் ,மனோகரன் ,திமுக செயலாளர் முருகன் ,துணை செயலாளர் செல்வம் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்துகொண்டு முழக்கமிட்டனர் .

சின்னமனூர்

சின்னமனூர் ஒன்றி யத்தில் புலிகுத்தி, சின்னம னூர்நகர், கீழபூலனந்தபுரம் ,ஓடைப்பட்டி, அப்பிபட்டி, ஆகிய 5 இடங்களில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. இதில்  கட்சியின் ஒன்றிய செயலா ளர் கே .எஸ். ஆறுமு கம்,கமிட்டி உறுப்பினர்கள் பி .ஜெயராஜ் ,எஸ் செல்வம், பி சேகர்,ஈஸ்வரி, மற்றும்  கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.