tamilnadu

img

தேனி மாவட்டத்தில் 12 நாட்களாக கொரோனா பாதிப்பு....

தேனி
தேனி மாவட்டத்தில் புதன்கிழமை வரை மொத்தம் 2,257 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யபட்டது. ஏப்ரல் 17 ஆம் தேதி வரை கண்டறியப்பட்ட சோதனையில் மொத்தம் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின் யாருக்கும் கொரோனா தொற்று புதிதாக உறுதிசெய்யப்பட வில்லை.

பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு  தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை தரப்பட்டது .இதில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி போடியைச் சேர்ந்த பெண் ஒருவர் இறந்துவிட்ட நிலையில் இதுவரை 37 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். புதன் கிழமை தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பினார். மீதம் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர்களின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என பலரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டனர். தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நபர்கள் உட்பட  2,257 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டதில் 43 பேருக்கு தவிர புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது . அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ,அரசு மருத்துவமனை ,ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த மற்றும் கபம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது .

விரைவில் கொரோனா இல்லாத மாவட்டமாக
தேனி மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் 5 நபர்கள் மே முதல்வாரத்தில் முற்றிலும் குணமாக வாய்ப்பு உள்ளது. தேனி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.