நெடும்பரம் கிராமத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் வரை போராட்டம் தொடரும்: பி.டில்லிபாபு
திருவள்ளூர், ஜன.20- நெடும்பரம் கிராமத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் வரை போராட்டம் தொட ரும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.டில்லி பாபு தெரிவித்துள்ளார். திருத்தணி அருகில் உள்ள நெடும்பரத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில், அனைத்து கட்சிகள் சார்பில் திங்களன்று (ஜன 19), ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சென்னை முதல் திருப்பதி தேசிய நெடுஞ்சாலை (N H-205), விரிவாக்க பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் திருத்தணி அருகில் உள்ள நெடும்பரம் கிராமத்தில், சாலைக்கு செல்லும் வழி அடைக்கப் பட்டு உயர்மட்ட சாலை அமைக்கப்பட்டு வரு கிறது. இதனால் நெடும்பரம், இலுப்பூர், ராமாபுரம், கோடிவள்ளி, பட்ரந் தாங்கல், ரகுநாதபுரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் 4 கி.மீ, தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. மக்கள் நலன் கருதி நெடும்பரத்தில் சுரங்கப் பாதை அமைத்து கொடுக்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலைத்துறை விரி வாக்கத்திற்கு நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு பேசுகை யில், பள்ளி, கல்லூரி மாண வர்கள், வேலைக்கு செல்ப வர்கள் என ஆயிரக்கணக் கான மக்களின் பிரச்சனை யான சுரங்கப்பாதையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். விவசாயிக ளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட வரு வாய்த்துறை அலுவலர் கொடுத்த வாக்குறுதியை மீறி நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெற்று வருகிறது. இது கண்டிக்கத் தக்கது. நெடும்பரத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் வரை போராட்டம் தொட ரும் என்றார். இதற்கு விவசாயி கள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசி நாராயணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் சி.பெருமாள், ஒன்றிய செயலாளர் என். ஸ்ரீநாத், துணைத் தலை வர்கள் ஆர்.தமிழ்அரசு, ஏ.அப்சல் அகமது, சிபிஎம் வட்டச் செயலாளர் வி.அந்தோணி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஞானம், முன்னாள் கவுன்சி லர் தணிகாசலம், பன்னீர் (விசிக), செந்தில்குமார் (நாதக), அருண் (புரட்சி பாரதம்) உட்பட்ட பலர் பேசினர். போராட்டத்தை மழுங்கடிக்க வருவாய்த்துறையினர் சதி திருத்தணி ஆர்டிஒ அலுவலகத்தில் அதிகாரிக ளுடன் பேசி தீர்வு காண லாம், ஆர்ப்பாட்டம் கூட தேவையில்லை, சுரங்கப் பாதை அமைக்கலாம் என்று சொல்லி நம்பவைத்து தலைவர்களை அழைத்து சென்றனர். துறை அதிகாரி கள் இல்லாததால் திட்டமிட்டு ஏமாற்றியுளளனர் என்பதை உணர்ந்த தலைவர்கள் அலுவலகத்தை விட்டு ஆவேசமாக வெளி யேறினர். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத் தெரிவிக்கையில், காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி யில்லை என இரவு 11.30 மணிக்கு மறுப்பு தெரி வித்துள்ளது, பந்தல் போட கூட அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது. மேலும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றனர்.