tamilnadu

img

வீட்டு மனைப் பட்டா கேட்டு மாதர் சங்கம் மனுக் கொடுக்கும் போராட்டம்

வீட்டு மனைப் பட்டா கேட்டு மாதர்  சங்கம் மனுக் கொடுக்கும் போராட்டம்

விருதுநகர். டிச.19- விருதுநகரில் வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் மனுக் கொடுக் கும் போராட்டம் நடத்தினர். விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு  நகரத் தலைவர் ஐ.ஜெயா தலைமை யேற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் என்.உமாமகேஸ் வரி. மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி ஆகியோர் பேசினர். மேலும் இதில், நகர பொருளாளர் ஆர். முருகேஸ்வரி, கார்த்திகைசெல்வி உட்பட பலர் பங் கேற்றனர். முடிவில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.