tamilnadu

img

தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து காத்திருப்பு போராட்டம்

தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம்  வழங்காததை கண்டித்து காத்திருப்பு போராட்டம்

அறந்தாங்கி, மே 20-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்தும், மாதம் 7 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வலியுறுத்தியும் சிஐடியு மாவட்டத் தலைவர் ஜின்னா தலைமையில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் தங்கராஜ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் நாராயணமூர்த்தி சிஐடியு, ஒன்றிய ஒருங்கினைப்பாளர் கர்ணா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.  ஆணையர், ஆனையர், ஒப்பந்தகாரர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சியர் கூறிய புதிய ஊதியம் வழங்க கோரியும், சம்பளத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியை உரிய நிறுவனத்தில் கட்ட வலியுறுத்தியும், மாத மாதம் சம்பளத்தை 7 ஆம் தேதிக்குள் வழங்க வலியூறுத்தியும், பிடித்தம் செய்த இஎஸ்ஐ தொகையை உரிய முறையில் கட்டி, ரசீது வழங்க வலியூறுத்தியும், அடையாள அட்டை வழ்ங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து காத்திருப்புப் போரட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை தீர்க்க முன் வாராவிட்டால். தூய்மை பணியாளர்களின் வாழ்வாரத்தை நாசமாக்கும். அறந்தாங்கி நகராட்சியை நாசப்படுத்தும். குப்பை கொட்டும் போராட்டம் புதன் அன்று நடைபெறும் என்று சிஐடியு நிர்வாகிகள் அறிவித்தனர்.