மதுரை, டிச.28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு ஏப்.2 முதல் 6 வரை மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்புக் குழு கூட்டம் கடந்த அக்.22 அன்று மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், சுமார் ஆயிரம் பேர் கொண்ட வரவேற்பு குழு உரு வாக்கப்பட்டது. தொடர்ந்து டிச. 13 அன்று வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் நடந்ததில் குழுக்கள் பிரிக்கப்பட்டன. மதுரையில் நடைபெறும் மூன்றா வது அகில இந்திய மாநாடு இது. இதற்கு முன் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி யாக இருந்த போது 1953 ஆம் ஆண்டு, மூன்றாவது அகில இந்திய மாநாடும் அதற்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவாகி 1972 ஆம் ஆண்டு 9 ஆவது அகில இந்திய மாநா டும் சிறப்பாக நடைபெற்றன. இதைத் தொடர்ந்து 2025 ஏப்ரல் மாதம் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. அதற்கான விளம்பரப் பணிகள் மதுரை மாநகர் பகுதியில் துவங்கியுள்ளன. மதுரை மாநகர் முழுவதும் பல விதங் களில் விளம்பரங்கள் செய்ய உள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக நகரின் மையப் பகுதியான தெப்பக்குளம், செல்லூர், சொக்கலிங்க நகர், பைபாஸ் ரோடு பகுதி உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் விளம்பரப் பணிகள் துவங்கியுள்ளன.