‘காசாவிற்கு ஆதரவான போராட்டம் தேவையற்றதாம்’
திருவனந்தபுரம் கேரளத்தின் பாலக்காடு தொகுதி ஐக்கிய ஜனநாயக முன்னணி (காங்கி ரஸ் கூட்டணி) வேட்பாளரும், நடி கருமான ரமேஷ் பிஷாரடி கடந்த வாரம் ஒரு பொது நிகழ்ச்சியில்,”இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக கேரளத்திலும் பல போராட்டங்களை நாம் காண்கிறோம். இந்த விவ காரங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதி ராகவோ கேரளத்தில் நடத்தப்படும் போராட் டங்கள், சம்பந்தமே இல்லாத சாமானிய மக்க ளிடையே மதம் மற்றும் சாதி ரீதியான மோதல்க ளுக்கு மட்டுமே வழிவகுக்கும். இது தேவை யற்றது” என சர்ச்சைக்குரிய வகையில் பேசி னார். ரமேஷ் பிஷாரடிக்கு கேரளம் முழுவதும் கண்டனங்கள் குவிந்தன. சிபிஎம் கடும் கண்டனம் இந்நிலையில், ஞாயிறன்று மாலை பாலக்காட்டில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்,”கேரளத்தில் காங்கிரஸ் கட்சி, அரசியலைப் பற்றிப் பேசத் தெரிந்த, பொது மக்களின் ஆதரவு கொண்ட ஒரு வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டும். ஒரு ‘ஜோக்க ரை’ நிறுத்தியிருக்கக் கூடாது. காசாவில் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக் கானோர் கொல்லப்படுவதைப் பற்றி இங்கு விவாதிக்கத் தேவையில்லை என்று பிஷாரடி கூறுகிறார். குறைந்தபட்சம் இந்த விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாட்டையாவது அவர் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய வேட்பாளரை நிறுத்திவிட்டு, காங்கிரஸ் கட்சி இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) மற்றும் பாஜக இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது” என கடும் கண்டனம் தெரிவித்தார். அதே போல, சிபிஎம் பாலக்காடு மாவட்டச் செயலாளர் சுரேஷ் பாபு பேசுகையில்,”பிஷாரடி ‘பாதி சங்கி’ போலப் பேசுகிறார். இஸ்ரேலின் நடவடிக்கைகளை சங்பரிவார் ஆதரவாளர்க ளால் மட்டுமே நியாயப்படுத்த முடியும். ஒரு அரசியல்வாதிக்கு இத்தகைய கருத்துகள் அழகல்ல” என கடுமையாக விமர்சித்தார்.
