states

img

இனி 10 கிலோ எடையில் மட்டுமே சிலிண்டர்?

இனி 10 கிலோ எடையில் மட்டுமே சிலிண்டர்?

மேற்கு ஆசியப் போர் காரணமாக இறக்குமதி பாதிக்கப் பட்டுள்ளதாலும், உள்நாட்டுக் கையிருப்பு குறைந்து வருவதாலும், எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் புதிய மாற்றங்களைச் செய்ய இந்திய அரசு எண்ணெய் நிறுவ னங்கள் (Oil Mar keting Companies) திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.  தற்போது புழக்கத்தில் உள்ள 14.2 கிலோ சிலிண்டர்களுக்குப் பதிலாக,  அதே சிலிண்டர்களில் 10 கிலோ எரிவா யுவை மட்டும் நிரப்பி விநியோகிக்க நிறு வனங்கள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. எடையைக் குறைக்கும் போது, அதற்கேற்ப சிலிண்டரின் விலையும் விகிதாச்சாரப்படி குறைக் கப்படும் என்றும், புதிய எடை குறித்த ஸ்டிக்கர்கள் சிலிண்டர்களில் ஒட்டப்படும் என்றும் அரசு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.