புதுதில்லி ‘நாட்டில் 53 லட்சம் டன் கச்சா எண்ணெய்கள் இருப்பு’
நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி திங்களன்று பேசுகையில், “மேற்கு ஆசிய நிலைமை கவலை அளிக்கிறது. நாட்டின் சேமிப்புக் கிடங்குகளில் இன்னும் 53 லட்சம் டன் கச்சா எண்ணெய்கள் இருப்பில் உள்ளன. விவசாயிகளுக்கு அளிக்க தேவையான அளவில் உரங்க ளும் கையிருப்பில் உள்ளன. சர்வதேச அளவில் ரூ. 3,000-க்கு விற்கப்படும் யூரியா, நமது நாட்டில் ரூ. 300-க்கு விற் கப்படுகிறது”என அவர் கூறினார்.