world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஈரானால் பிரிட்டனுக்கு அச்சுறுத்தல் இல்லை - பிரதமர் ஸ்டார்மர்

இங்கிலாந்து, மார்ச் 23- ஐரோப்பிய நாடுகளை போருக்குள் இழுக்க நேதன்யாகு திட்டமிட்டு வரும் நிலையில், பிரிட்டன் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் ஆபத்து இல்லை. அதற்கான எந்தவொரு உளவுத்துறை மதிப்பீடும் இல்லை என்று  பிரிட்டன் பிரதமர்  ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.  ஈரானில் இருந்து 4000 கி.மீ தொலை வில் இந்தியப் பெருங்கடலில் உள்ள  டீகோ கார்சியா என்ற அமெ.,-பிரிட்டன் கூட்டு ராணுவத்தளம் மீது மார்ச் 21 அன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஈரான் ஏவியதாகவும், அந்த ஏவுகணைகள் வழி மறித்து அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஈரானிடம் 2000 கி.மீ வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் மட்டுமே உள்ள தாக கருதப்பட்டநிலையில் 4000 கி.மீ தூரம் வரை சென்றும் தாக்கும் ஏவு கணைகள் உள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.  குறிப்பாக இந்த ஏவுகணைகள் மூலமாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி யை ஈரானால் தாக்க முடியும் என இஸ்ரேல் ராணுவம் பிரச்சாரம் செய்யத் துவங்கியது. இஸ்ரேல் பிரதமர் நேதன் யாகுவும் உலக நாடுகள் ஈரானுக்கு எதிராக போரில் இணைய வேண்டும் என அனைவரையும் நேரடிப் போருக்குள் அவர் இழுத்து வருகிறார்.  இந்நிலையில் டீகோ கார்சியா (Diego Garcia) தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரிட்டன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி றதா என்ற கேள்வி எழுந்தது. இதற்குப் பதிலளித்த பிரிட்டன் பிரதமர்  ஸ்டார்மர், “மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற் கொள்கிறோம். தற்போது ஈரானின் தாக்குதல் இலக்காக பிரிட்டன் மாறுவ தற்கான எந்தத் தரவுகளும் இல்லை என கூறியுள்ளார்.  போர்ப் பதற்றத்தை தணிக்க வேண்டி யது அவசியம் என்று வலியுறுத்திய அவர்,  “போருக்குள் செல்லாமல் பிரிட்டிஷ் நலன்களையும் உயிர்களையும் பாது காப்பது முக்கியம்” என்றும்  கூறினார். டீகோ கார்சியா ராணுவத்தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த முயற்சித் ததாக ஈரான் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதற்கு ஈரான் மறுப்பு தெரி வித்துள்ளது.  ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி போர் துவங்கிய முதல் வாரத்திலேயே மார்ச் 8 அன்று கூறுகையில், எந்த நாட்டையும் ஈரான்  அச்சுறுத்தக் கூடாது என்ப தற்காக எங்கள் ஏவுகணைகள் எவ்வ ளவு தூரம் பயணித்து தாக்க வேண்டும் என்ற வரம்பை  நாங்கள் வேண்டு மென்றே 2,000 கி.மீ-க்கும் குறை வாக வைத்துள்ளோம் என்று குறிப்பிட் டிருந்தார். ஈரானால் அமெரிக்காவுக்கு உடனடி ஆபத்து இல்லை என்றாலும் இஸ்ரேலின் வலுவான லாபிதான் அமெரிக்காவை இந்தப் போருக்குள் இறக்கி விட்டுள்ளது என டிரம்ப் நிர்வா கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு பிரி வுத்தலைவர் ஜோ கென்ட் குற்றம்சாட்டி ராஜினாமா செய்திருந்தார்.  இந்நிலையில் தான், ஈரான் தன்னி டம் அதிக தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் இருப்பதாக கூறாத நிலையில், டீகோ கார்சியா ராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததற்கு உறுதியான ஆதா ரங்கள் ஏதும் இல்லாத நிலையில், ஈரானி டம் அதிக தூரம் சென்று தாக்கும் ஏவு கணைகள் இருப்பதாகப் பிரச்சாரம் செய்து உலக நாடுகளை இந்தப் போருக் குள் இழுக்க நேதன்யாகு திட்டமிட்டு வருகிறார் என போர் தொடர்பான ஆய்வா ளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“அரிய தாதுக்களை கொள்ளையடிக்க  நம்மை மீண்டும் அடிமையாக்க திட்டமிடுகிறார்கள்” வளரும் நாடுகளுக்கு பிரேசில் ஜனாதிபதி லூலா கடும் எச்சரிக்கை

போகோட்டா, மார்ச் 23-  அரிய தாதுக்களை கொள்ளைய டிக்க நம்மை மீண்டும் காலனி நாடுக ளாக அடிமைப்படுத்த திட்டமிடுகிறார்கள் என வளரும் நாடுகளுக்கு பிரேசில் ஜனா திபதி லூலா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொலம்பியா தலைநகர் போகோட் டாவில் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க-கரீபியன் நாடுகள் கூட்ட மைப்பு பிரதிநிதிகள் பங்கேற்புடன் நடை பெற்ற உச்சி மாநாட்டில் லூலா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.  வெனிசுலா ஜனாதிபதி  நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கடத்தியது, கியூபா மீதான எரிபொருள் தடை ஆகிய வற்றைச் சுட்டிக்காட்டி பேசிய லூலா, “கியூ பாவுக்கு இப்போது என்ன செய்கிறார் கள்? வெனிசுலாவுக்கு என்ன செய்தார் கள்? அது ஜனநாயகமா?” என்று நேரடி யாக அமெரிக்காவை குறிப்பிட்டு  கேள்வி எழுப்பினார். பொய்யான காரணம் கூறி போர் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலையும் கடுமை யாக கண்டித்த அவர், சதாம் உசேன் ரசாயன ஆயுதங்கள் வைத்திருப்பதாகச் சொல்லித் தான் இராக் மீது போர் தொடுத்தார்கள். அந்த ஆயுதங்கள் எங்கே? யார் கண்டுபிடித்தார்கள்? அது போல தான் ஈரான் மீதும் அணுகுண்டு தயாரிக்கிறது என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து போர் தொடுத்துள்ளார்கள். பொய்யான கார ணங்களை முன்வைத்து பிற நாடு களின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்து வது  புதிதல்ல. வரலாறு திரும்பத் திரும்ப நிகழ்கிறது என்று குறிப்பிட்டார். அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தி யங்கள் ஒரு காலத்தில் தங்கம், வெள்ளி, வைரம் என்று கொள்ளையடித்தார்கள். இப்போது அரிய மண் தாதுக்களும் முக்கிய கனிம வளங்களும் அவர்களது புதிய இலக்காகி இருக்கின்றன. “நம்மி டம் இருப்பதை எல்லாம் எடுத்துவிட்டு, இப்போது நம் அரிய தாதுக்களையும் சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கி றார்கள். மீண்டும் நம்மை காலனி நாடாக மாற்ற நினைக்கிறார்கள்” என்று அவர் விமர்சித்தார். 200 ஆண்டுக்கும் மேலான அமெரிக்க ஆதிக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் அர சியலில் அமெரிக்கா தலையீடு செய்வ தன் வரலாறு 200 ஆண்டுகளுக்கும் மேலானது. 1823 ஆம் ஆண்டு அமெ ரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜேம்ஸ் மன்றோ காலத்திலிருந்தே லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கும் சுரண்டலுக்கும் உட்பட்ட பகுதி என கருதப்பட்டு வருகி றது. பனிப்போர் முடிந்த பிறகு இந்த தலையீடு சற்று குறைந்தது. ஆனால் டிரம்ப் இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அந்தப் போக்கு மீண்டும் தலை தூக்கியிருக்கிறது என குறிப்பிட்டார். கடந்த ஆண்டு பதவியேற்றதி லிருந்து டிரம்ப் நிர்வாகம் கரீபியன் கடல் பகுதியில் படகுகள் மீது குண்டு வீசியது. வெனிசுலாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு கடல் தடை விதித்தது.  ஹோண்டுராஸ் மற்றும் அர்ஜெண்டினா வின் தேர்தலில் தலையிட்டு தனக்கு சாதகமான ஆட்சியை அமைத்துக் கொண்டது. பிரேசில் மீது  50 சதவீத வரி விதித்தது. இது வெளிப்படையான மிரட்டல் அரசியல். உலகம் உழுவதும் போர்கள் தூண் டப்பட்டு வரும் நிலையில் ஐ.நா அவை யின் செயலின்மையை விமர்சிக்கும் வகையில் “நாம் ஐ.நா அவையின் முழுமையான தோல்வியை காண்கி றோம்” என்று லூலா கடுமையாக விமர்ச னம் செய்தார்.