திமுக எம்.பி., அருண் நேரு
நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம் 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தைப் பின்பற்றுவதில்லை. மாறாக மாநிலங்களை மட்டும் நிதி ஒழுக்கத்தைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகிறது. அதனால் மாநிலங்களுக்கு அறிவுரை வழங்க ஒன்றிய அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
ஆம் ஆத்மி எம்.பி., ராகவ் சதா
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நாளொன்றுக்கு 1.5 ஜிபி, 2 ஜிபி என தினசரி டேட்டா வரம்பு கொண்டரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. இந்த வரம்பு ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் ஒருமுறை மாற்றியமைக்கப் படுகிறது. அன்றைய தினம் பயன்படுத்தப்படாத மீதமுள்ள டேட்டா காலாவதியாகிவிடுகிறது. அது அடுத்த நாளுக்குக் கொண்டு செல்லப்படுவதில்லை. இது ஏன்?
பத்திரிகையாளர் ரன் விஜய் சிங்
ஈரான்-அமெரிக்கப் போரின் தாக்கம் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்ற அச்சம் உள்ளது. கொரோனா காலத்தின் போது இத்தகைய சவாலை நாம் எதிர்கொண்டுள்ளோம் என பிரதமர் மோடியே நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். இதன்மூலம் வரும் நாட்களில் நாட்டின் நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்பது தெளிவாகிறது.
ஊடக உண்மை சரிபார்ப்பாளர் முகமது ஜுபைர்
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, பெட்ரோல் விலை உயர்வு, அமெரிக்க டாலரின் மதிப்புக்கு எதிராக கிரிக்கெட் வீரரோ அல்லது திரைப்பட நடிகரோ தாராளமாக டுவீட் செய்ய முடிந்தது. ஆனால், இன்று அவர்கள் அதேபோன்ற கருத்தைப் பதிவிட்டால் நிலைமை என்னவாகும்? என்று யோசித்து பாருங்கள்.
