tamilnadu

img

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்க கொண்டு வந்த தையல் மிஷின்கள் அத்துமீறி போராட்டம் நடத்திய பாஜகவுக்கு சிபிஎம் கடும் கண்டனம்

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்க கொண்டு வந்த தையல் மிஷின்கள் அத்துமீறி போராட்டம் நடத்திய பாஜகவுக்கு சிபிஎம் கடும் கண்டனம்

நாகர்கோவில். மார்ச். 23- குமரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் வைக்க கொண்டு வந்த தையல் மிஷின் களை ஏற்றிய  வந்த  லாரியை  மறித்து  போராட்டம் நடத்திய பாஜகவுக்கு குமரி மாவட்ட சிபிஎம் கடும் கண்ட னத்தைதெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 24 ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில், சிறு பான்மையினர் மற்றும் பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரங்கள் மற்றும் கட னுதவிகள் வழங்கப்பட்டது, அதில் மீதமுள்ளள்ள பயனாளி களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட தையல் எந்திரங்களை , வெளி மாநிலத் தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பார்சல் சர்வீஸ் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தையல் எந்திரங்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் வந்திறங்கியது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடை முறைகள் உள்ளதால் தற்போது அந்த இயந்திரங்களை பயனாளி களுக்கு வழங்க இயலாத நிலை யில் ஆட்சியர் அலுவலக தரையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேர்த லுக்குப் பிறகு கொடுக்கப்படும் என அதிகாரிகள் முடிவு எடுத்தி ருந்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் தையல் இயந்திரங்கள் இறங்குவதற்கு வந்த லாரியை பாஜகவை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு அந்த லாரியில் என்ன உள்ளது, பணம் உள்ளதா என பல்வேறு கேள்விகளை எழுப்பி ஆர்ப்பாட் டம் நடத்தினர். அவர்களுக்கு அதி காரிகள் தற்போது அந்த இயந்தி ரங்களை வழங்குவதற்கு கொண்டு வரவில்லை. பாது காப்பாக வைப்பதற்கு ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தனர் ஆனாலும் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து குமரி மாவட்ட சிபிஎம் செயற்குழு உறுப்பினர் எம். அகமது உசேன் தெரிவித்ததாவது, அரசு விழாவில் தமிழக முதல்வ ரால் அறிவிக்கப்பட்ட மாற்று திற னாளிகளுக்கான வாகனங்கள், இலவச பட்டா, இலவச தையல் இயந்திரங்கள்  வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் விடுபட்ட பயனாளி களுக்கான தையல் இயந்தி ரங்கள் தற்போது குமரி மாவட்டம் வந்தடைந்தது.தேர்தல் நடத்த விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் அதனை வழங்க இயலாது என அந்த இயந்தி ரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் பாஜகவினர் அங்கு திரண்டு கீழ்த்தரமான அரசியல் லாபத்திற்காக அதனை தவறு தலாக பரப்புரை செய்தனர்.  இதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இது மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை மற்றும் ஈடு பட்டவர்கள் மீது சரியான நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிபிஎம் சார்பில் கோரிக்கை விடுக்கிறேன் என தெரிவித்தார்.