“ஈரானில் சிக்கியுள்ள மாணவர்களை பிரதமர் மோடி மீட்க வேண்டும்”
ஈரானில் சிக்கித் தவிக்கும் ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகை யில்,“அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குத லால் ஈரானில் நிலைமை வேகமாக மோச மடைந்து வருகிறது. அங்கு கல்வி பயின்று வரும் ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வரு கின்றனர். அதனால் மாணவர்கள் பாது காப்பாக திரும்புவதை உறுதி செய்ய பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டு உறுதி செய்ய வேண்டும். வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் அமைச்சர் ஜெய்சங்கர், மாணவர்களை மீட்பதற் கான முயற்சிகளை உடனடியாகத் தொ டங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கி றேன்” என மெகபூபா முப்தி தெரிவித்துள் ளார்.
