நாடாளுமன்றத்தில் இருந்து நழுவி ஓடிய பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனை களுக்குப் பதில் அளிக்காத பிரதமர் மோடி, செவ்வாய்க்கிழமை அன்று கும்பமேளா குறித்து விதந்து ஓதினார். “கும்பமேளாவை வெற்றியடைச் செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி. கும்பமேளாவின் போது, நாட்டின் பிரம்மாண்டத்தை ஒட்டுமொத்த உலகமும் கண்டு வியந்தது” என பேசினார். அப்போது சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், “கும்ப மேளா பெருமை பற்றி மட்டும் பேசினால் போதாது, கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரி ழப்பு சம்பவங்கள் தொடர்பாகவும் தகவல் தெரிவிக்க வேண்டும். தொகுதி மறுசீர மைப்பு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட நாட்டிற்கு தேவையான பிற முக்கிய பிரச்ச னைகள் குறித்தும் பிரதமர் மோடி பதி லளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்து கிளர்ச்சியில் ஈடுபட்டு, முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் முழக்கங் களால் முகம் இறுகிப் போன பிரதமர் மோடி மக்களவையில் இருந்து பாதியிலேயே ஓட்டம் பிடித்தார். அவருடன் ஒன்றிய அமைச்சர் களும் மக்களவையில் இருந்து வெளியேறினர்.