tamilnadu

img

நுண்நிதி நிறுவனங்களின் கட்டாய வசூலை தடுத்திடுக!

பீடித்தொழிலாளர்கள்  மனு கொடுக்கும் போராட்டம்

  திருநெல்வேலி, ஜூன் 5- ஆலங்குளம், குரு வன்கோட்டை,  கண்டபட்டி யில் சுயஉதவிக்குழுக்களில் உள்ள பீடித்தொழிலாளர்க ளிடம் நுண் நிதி நிறுவனங்கள்  கட்டாயப்படுத்தி கடன் வட்டி வசூல் செய்வதை தடுத்தி டக் கோரி நெல்லை மாவட்ட பீடித்தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பாக ஆலங்குளம் வட்டாட்சி யரிடம்  மனுக்கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்திற்கு பீடி சங்க ஆலங்குளம் வட்டார தலைவர்  பி.எஸ்.மாரி யப்பன்  தலைமை வகித்தார். சங்க மாவட்ட பொதுச்செய லாளர் எம்.வேல்முருகன் ஆலங்குளம் பீடி சங்க  வட்டார செயலாளர் ,ஏ.மகா விஷ்னு,சி.பி.எம்.தாலுகா குழு உறுப்பினர்கள் பாலு  வெற்றிவேல்,  பீடி சங்க நிர்வாகிகள்  பால்ராஜ்  அழகுசுந்தரி  பவித்ரா வசந்தி  சொரணம்  சக்தி செல்வம்  மற்றும் சுயஉதவி குழுவில் உள்ள பீடி தொழிலா ளர்கள் 50 பங்கேற்றனர்.