tamilnadu

img

பிரவீனின் தந்தை ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை:
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் சென்னை மருத்துவமாணவர் பிரவீனின் தந்தையின்  ஜாமீன் மனுவை சென்னைஉயர்நீதிமன்ற மதுரைக்கிளை  தள்ளுபடி செய்தது. சென்னையைச் சேர்ந்த மருத்துவ மாணவர் பிரவீன். நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இவரும் இவரது தந்தையும் விசாரணை வளையத்தில் உள்ளனர். பிரவீனுக்கு ஜாமீன்கிடைத்துவிட்டது. இந்த நிலையில் பிரவீனின் தந்தை சரவணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,“சென்னை பிரிஸ்ட் கல்லூரியில் மருத்துவக் கல்வியில் எனது மகன்சேர்ந்தான்.  பின்னர் மருத்துவக்கல்வி நடத்த பிரிஸ்ட் கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லை என்பதால் நீட் தேர்வு எழுதி 130 மதிப்பெண்கள் பெற்றான். அரசு மருத்துவக் கல்லூரியில்சேர இந்த மதிப்பெண்கள் போதுமானவை என்றாலும், விருப்பத்தின் பேரில் தனியார் கல்லூரி ஒன்றில் 22 லட்சத்து 60ஆயிரம் ரூபாய்பதிவுக்கட்டணமாக செலுத்தி கல்லூரியில்சேர்த்தேன். இந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்செய்ததாக எவ்விதமான ஆதாரமும் இன்றி காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.வழக்கை செவ்வாயன்று  விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஜாமீன் தர மறுப்புத் தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.