ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை
முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, ஏப்.30 - ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு காவல்துறை யினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா மற்றும் மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து நிகழும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் குமரி மாவட்டக் குழு சார்பில், தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக அனுமதி கோரப்பட்டிருந்தது. காவல்துறை அனுமதி மறுத்து, அராஜகமாக நடந்து கொண்டதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. சமீப காலங்களாக தமிழகத்தில் ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது ஜனநாயக அமைப்புகளின் போராட்ட உரிமைகளை மறுக்கும் போக்காகும். கடந்த பிப்.28 அன்று சென்னையில் நடை பெற்ற பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வலியுறுத்திய பேரணிக்கு, பலர் வர இருந்த நிலையில், அவர்களை பேரணிக்கு வரவிடாமல் தடுத்து, மாவட்டத் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது போன்ற நிகழ்வுகள் அரங்கேறின. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது இப்போ ராட்டத்திற்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை அச்சுறுத்தியது, ஒலிப்பெருக்கிகளை அப்புறப்படுத்தி யது, முழக்கங்கள் எழுப்ப விடாமல் தடுத்து நிறுத்தியது போன்ற காவல்துறையின் செயல்கள் ஜனநாயக இயக்கங் களின் குரல்வளையை நெறிப்பதாகும். இது போன்ற சம்பவங்களில் தமிழக முதலமைச்சர் உட னடியாக தலையீட்டு, மாவட்ட காவல்துறையின் அத்துமீறல் களை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.