tamilnadu

img

மரக்கன்று நடும் போராட்டத்தை தடுத்து காவல்துறை அராஜகம்

மரக்கன்று நடும் போராட்டத்தை தடுத்து காவல்துறை அராஜகம்

மலையடிக்குப்பத்தில் விவசாயி கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மரக்கன்று நடும் போராட்டத்தில் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் போலீசார் காட்டுத் தர்பாரில் ஈடுபட்ட னர். பெ. சண்முகம், டி. ரவீந்திரன் உள்ளிட்ட தலைவர்களை குண்டுக் கட்டாக தூக்கியும், தரதரவென்று இழுத்துச் சென்றும், பெண்களின் புடவையை உருவியும் அராஜகத்தில் ஈடுபட்டனர். மலையடிக்குப்பம் கிரா மத்தையே போர்க்களமாக மாற்றினர். 164 ஏக்கரில் விவசாயம் கடலூர் வட்டத்திற்குட்பட்ட வெள்ளைக்கரை ஊராட்சியில் மலை யடிகுப்பம், வெ. பெத்தாங்குப்பம், கொடுக்கன்பாளையம், கீரப்பாளை யம், கட்டாரச்சாவடி உள்ளிட்ட கிராமங்களில் 5 தலைமுறைகளாக 155 குடும்பங்கள், 164 ஏக்கர் அரசு தரிசு நிலத்தில் வேளாண் பயிர் செய்து ஆண்டு அனுபவித்து வருகின்றனர். முந்திரி, பலா, தென்னை, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகளை செய்து வருகின்றனர்.  பிடுங்கி எறிந்த அராஜகம் இந்நிலையில், விவசாயிகள், பொதுமக்களை சட்டவிரோதமாக மிரட்டி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முந்திரி மரங்களை 40-க்கும் மேற்பட்ட ராட்சத பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு ஒரே இர வில் வேரோடு பிடுங்கி எறிந்து விவ சாயத்தை அழித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விவ சாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். மரங்களை வெட்ட தடை வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம் மரங்களை வெட்டுவதற்கு உட னடியாக தடை விதித்தது. மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், மாவட்ட ஆட்சியரோ இது வரையில் விவசாயிகளிடம் விசார ணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வில்லை.  மாவட்ட ஆட்சியர் சமர்பிக்கும் அறிக்கையில் விவசாயிகளுக்கு உடன்பாடு இல்லை என்றால் மேல் முறையீடு செய்யவும் 10 நாட்கள் அவகா சம் வழங்கி ஏற்கெனவே உயர் நீதி மன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், சுமார் 200ஆண்டு களாக விவசாயம் செய்துவரும் விவ சாயிகளை நிலத்தை விட்டு வெளி யேற்ற முயற்சிக்கும் மாவட்ட நிர்வாகத் தின் நடவடிக்கைகளை கண்டித்தும், முந்திரி மரங்களை பிடுங்கி எறிந்த நிலையில், ‘நிலம் எங்கள் உரிமை, உரி மையை பாதுகாப்போம்’, என்ற முழக் கத்தோடு முந்திரி மரக்கன்று நடும் போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது. நில உரிமைப் போராட்டம் நிலங்களில் இருந்து பிடுங்கப் பட்ட 9000 ஆயிரம் முந்திரி மரங்களுக்கும் நஷ்ட ஈடாக ஒரு மரத்திற்கு ரூ. 1 லட்சம் விகிதம் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு  வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள நில உரிமை மற்றும் வாழ்வுரிமைக்கான சட்டத்தின்படி அவரவர் ஆண்டு அனுபவித்து வரும்  இடத்தை அவர்களுக்கே பட்டா செய்து  தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும், ஆக்கிரமிப்பு குறித்த எந்த விதமான சட்ட நெறிமுறைகளையும், நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் மதிக்காமல் கால அவகாசம் இல்லாமல் நன்கு காய்த்துவளர்ந்த 9 ஆயிரம் முந்திரி  மரங்களை வேறுடன் பிடுங்கி எறிந்த  கடலூர் மாவட்ட வருவாய்துறை, காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனை வர் மீதும் உரிய குற்ற நடவடிக்கை மேற்கொண்டு பசுமை தீர்வாய தீர்ப்பு கள் மற்றும் வழிகாட்டுதல்படி உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். 500 போலீசார் குவிப்பு இந்நிலையில், போராட்டம் நடைபெறும் மலை அடிக்குப்பம் கிரா மத்தில் வெள்ளியன்று காலை முதல்  500-க்கும் மேற்பட்ட காவலர்கள் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் குவிக்கப்பட்டனர். கிராமங்களை முழு வதுமாக சுற்றி வளைத்து யாரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுப்பு அரண்கள் அமைத்து இருந்தனர். விவசாயிகளுக்கு வீட்டுக்காவல் மேலும் அங்குள்ள விவசாயிகள்  வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வீட்டு வாசலிலேயே காவலுக்கு  இருந்தனர். ஆண்களும், பெண்களு மாக போராட்டத்திற்கு அணிதிரண்ட போது அவர்களை வீட்டைவிட்டு வெளியே விடாமல் வீட்டுக்கு உள்ளேயே போலீசார் அடைத்து வைத்து காவல் இருந்தனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் டி. ரவீந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் அந்தக் கிராமத்திற்கு வந்தனர். உள்ளே நுழைய அனுமதிக்காத போலீசார் ஆனால், அவர்களை கிராம எல்லையிலே போலீசார் தடுத்து நிறுத்தினர். தலைவர்கள் பலமுறை எஸ்.பி.யிடம் பேசியும், மரக்கன்று நடு வதற்கு அனுமதிக்க முடியாது என்று  ஒரே வார்த்தையை பல நூறு முறை  சொல்லி முரண்டு பிடித்தார். இதனை யடுத்து கோட்டாட்சியர் அபிநயா, வட்டாட்சியர் பலராமன் ஆகியோர் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் அதிகார வர்க்கம் அனைவரும் ஒருமித்த கருத் தோடு மரக்கன்று நட அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி னர். மரக்கன்று நடும் போராட்டத்தை  நடத்த விடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதாகவும் தெரிவித் தனர். நீங்களும் சுமூகமாக பேசி முடிக்கவில்லை, எதற்கெடுத்தாலும் மாவட்ட ஆட்சியர் சொன்னதாக கூறு கிறீர்கள், எங்கிருந்தோ வந்த உத்த ரவை அமல்படுத்துகிறீர்கள் எனவே  மாவட்ட ஆட்சியரை நேரில் வந்து  பேச சொல்லுங்கள் என்று மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், காவல் துறை கண்காணிப்பாளரிடம் கூறி னார். அதற்கும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. மரக்கன்றுகளை நட்ட  கிராம மக்கள் இந்நிலையில் அந்த கிராமத் தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வேறு வழியாக ஓடி தங்கள் நிலத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

அப்போது போலீசார் அவர்களின் ஆடைகளை பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றனர். பெண்களின் சேலையை உருவி யும் கைது செய்ய முற்பட்டனர். அப் போது சில பெண்கள் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். விவ சாயிகளின் சட்டைகளை வெறி பிடித்தது போல் காவல்துறையினர் கிழித்து எறிந்தனர். இந்நிலையில் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “எங்கள் 5 பேரை மட்டும் அனு மதியுங்கள் மரக்கன்று நட்டு விட்டு  வந்து விடுகிறோம்” என்று கூறியும் யாரையும் அனுமதிக்க முடியாது என்று கறாராக எஸ்.பி தெரிவித்தார். குண்டுக் கட்டாகத்  தூக்கிச் சென்று கைது இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. அப்போது தலைவர்களை போலீசார் காட்டு மிராண்டித்தனமாக, இழுத்துச் சென்றும் தூக்கிச்சென்றும் கைது செய்தனர். மலையடி குப்பமே போர்க்களமாக காட்சியளித்தது. போராட்டக்காரர்களை காவல் வாக னத்தில் தூக்கிச் சென்று ஏற்றிய பின்னர் கீழே இருந்தவர்களை காவல் துறையினர் கடுமையாக தாக்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ.சண் முகம் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் டி. ரவீந்தி ரன், கட்சியின் மாவட்டச் செயலா ளர் கோ. மாதவன், மாநிலக்குழு உறுப் பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சர வணன், மாவட்டப் பொருளாளர் ஆர். ராமச்சந்திரன், துணைத் தலை வர் எஸ். தட்சிணாமூர்த்தி, விதொச மாவட்டச் செயலாளர் எஸ். பிரகாஷ், மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.  வாஞ்சிநாதன், கே. கிருஷ்ணன்,  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஜே. ராஜேஷ்கண்ணன், ஆர். அமர்நாத், ஒன்றிய மற்றும் வட்டச் செயலாளர்கள் ஆர். பஞ்சாட் சரம், ஏ. விஜய், எஸ்.கே. ஏழுமலை,  ஸ்ரீபன் ராஜ், எம்.பி. தண்ட பாணி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கே. பக்கிரான், ஆர். ஆளவந் தார், ஜெயபாண்டியன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் கலை வாணன் உள்ளிட்ட 500-க்கும் மேற் பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.