tamilnadu

img

பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா பயணம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா பயணம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

அம்மான்/அடிஸ் அபாபா பிரதமர் மோடி அண்மையில் மேற்கொண்ட ஜோர்டான் மற்றும் எத்தியோப்பியப் பயணங்களில் பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் பொருளாதார உறவுகளில் முக்கிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. எத்தியோப்பியப் பயணம்  கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிற்கு 2011-க்குப் பிறகு இந்தியப் பிரதமர் மேற் கொண்ட முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும். இந்தப் பய ணத்தின் போது இரு நாடுகளு க்கும் இடையிலான உறவு ‘உத்திசார் கூட்டாண்மை’ நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவின் இரண்டா வது பெரிய வர்த்தகக் கூட்டாளி யாக இந்தியா உள்ளது. அந்நாட்டு டன்  உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியா 23.7 சதவிகித  பங்கு வகிக்கிறது.  எத்தியோப்பியாவில் 675-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் சுமார் 6.5 பில்லியன் டாலர்கள் ஏற் கெனவே முதலீடு செய்ய்துள்ளன. இந்நிலையில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் இந்தியப் படை யினரின் பயிற்சி ஒத்துழைப்பை உறுதி செய்தல், சுங்க விவகா ரங்களில் இரு நாடுகளும் பரஸ்பரம் நிர்வாக உதவிகளைப் பகிர்ந்து கொள்ளுதல்,  எத்தியோப்பிய வெளியுறவு அமைச்சகத்தில் புதிய தரவு மையம் அமைத்துக் கொடுத்தல் ஆகியவற்றுக்கு  இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஜோர்டான் பயணம் எத்தியோப்பியாவுக்கு செல் லும் முன்னதாக ஜோர்டான் நாட்டு டனான 75 ஆண்டுகால இராஜ தந்திர உறவைக் கொண்டாடும் வித மாக பிரதமர் அந்நாட்டுக்கு பயணம் செய்தார். 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் அந்நாட்டிற்கு மேற்கொண்ட முதல் முழுமையான இருதரப்புப் பயணம் இதுவாகும். இப்பயணத்தில் பயங்கரவா தத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜோர்டானுடன்  இந்தியா இணை ந்து செயல்பட  முடிவு செய்யப் பட்டுள்ளது.  காசா பகுதியில் நிலவும் சூழல் மற்றும் மேற்கு ஆசியாவின் அமைதி தொடர்பான விவரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். அதேபோல ஜோர்டானின்   உலகப் புகழ்பெற்ற பெட்ரா மற்றும் இந்தியாவின் எல்லோரா ஆகிய வரலாற்றுச் சின்னங்களை  இணைக்கும் வகையில் கலாச்சார ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் செயல்படும் ரூபே (ஏடிஎம்) அட்டைகளை ஜோர்டா னில் அறிமுகப்படுத்துவது தொடர் பான கடிதம் பரிமாறப்பட்டுள்ளது. பசுமை எரிசக்தித் தேவைக ளுக்காக அணுசக்தி ஒத்துழைப்பு குறித்தும் இரு நாடுகளும்  ஆலோ சனைகள் மேற்கொண்டுள்ளன.  மேலும் அடுத்த 5 ஆண்டுகளுள் இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவது (5 பில்லியன் டாலர்கள்) என மோடி முன்மொழிந்துள்ளார்.