tamilnadu

img

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்குக!

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்குக!

தலைமைச் செயலகம் நோக்கி போக்குவரத்து தொழிலாளர்கள் பேரணி

சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழி லாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், வியாழனன்று (மார்ச் 6) தலைமை செயலகம் நோக்கி பேரணி நடத்தினர். கழகங்களின் வரவுக்கும் செல வுக்குமான வித்தியாசத் தொகையை அரசாணை 36-இன் படி, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்க வேண்டும்; 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனே  பேசி முடிக்க வேண்டும்; 1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்;  ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 112 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், 2023 ஜூன் மாதம்  முதல் பணி ஓய்வு பெற்ற தொழிலா ளர்களுக்கு ஓய்வுக்காலப் பணப் பலன்களை வழங்க வேண்டும்; ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்வதை ரத்துசெய்ய வேண்டும்; காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்துப் பிரிவிலும் கல்வித் தகுதிக்கு ஏற்றாற்போல் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.

தடுத்து நிறுத்திய காவல்துறையினர்

பல்லவன் சாலை பாடிகாட் முனீஸ்வரர் கோயில் அருகில் இருந்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேரணியைத் துவக்கி வைத்த நிலையில், சிறிது தூரத்திலேயே காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தினர்.  இதையொட்டி, அ. சவுந்தரராசன் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது, போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசால் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர்; வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் பிரச்சனைகளுக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு  தீர்வுகாண வேண்டும். அடிப்படை யில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்கு மான வித்தியாசத் தொகையை வழங்காமல் போக்குவரத்து தொழி லாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது.

தொழிலாளர்களின் பணம்  ரூ. 50 ஆயிரம் கோடி!

தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த 15 ஆயிரம் கோடி ரூபாய், இழப்பீடு இன்னும் பிற வகைகள் என மொத்தம் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான தொழிலாளர்களின் பணத்தை அரசு திருப்பித்தராமல் உள்ளது. அவற்றை விரைந்து வழங்க வேண்டும். ஊதியம் உள்ளிட்டவைகளில் இதர துறை  ஊழியர்களிடம் இருந்து போக்கு வரத்து தொழிலாளர்களை வேறு படுத்தக் கூடாது. மினி பேருந்தை தனியார் இயக்க முடியும் என்றால் ஏன் கழகங்களால் இயக்க முடியாது? தற்போது பேருந்துகள் ஓடக்கூடிய ஒரே வழித்தடத்தில் மினி பேருந்து களை இயக்க உள்ளனர். இதனால் ஏற்படும் நஷ்டத்தை காரணம் காட்டி, கழகங்களை தனியார்மயமாக்கு வார்கள். எனவே, அரசே மினி பேருந்துகளை இயக்க வேண்டும். தனியார்மய நடவடிக்கையைக் கைவிட வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கை களை பட்ஜெட்டில் அரசு நிறை வேற்றும் என்று எதிர்பார்க்கிறோம். மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற பொறுப்புடன் செயல்பட்டு வருகிறோம். இதை பலவீனமாகக் கருதக்கூடாது.  இவ்வாறு அ. சவுந்தரராசன் கூறினார்.

அரசு செயலாளருடன் தலைவர்கள் பேச்சு

முன்னதாக பேரணியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் கே. ஆறுமுக நயினார்,  பொருளாளர் சசிகுமார், துணைப் பொதுச் செயலாளர்கள் வி.தயானந்தம், கனகராஜ், ஏஐடியுசி தலைவர்கள் நந்தா சிங், முருகராஜ், டிடிஎஸ்எப் தலைவர்கள் திருமலைச்சாமி, ராஜாஜி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். அவர்களின் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கை கள் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் துறைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டியை சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.