நக்கீரன் கோபால் உட்பட இருவருக்கு ‘கலைஞர் எழுதுகோல்’ விருது
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த இதழியலாளருக்கான ‘கலைஞர் எழுதுகோல்’ விருதுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தலைமைச் செயலகத்தில் வியாழனன்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், ‘கலைஞர் எழுதுகோல் விருது’களை நக்கீரன் இரா. கோபாலுக்கும், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு பெண்மையைப் போற்றும் வகையில் சிறப்பினமாக சுகிதா சாரங்கராஜுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருது வழங்கினார். மேலும், கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பில் மரபு வழி ஓவியம், நவீன பாணி ஓவியம், சிற்பக்கலை ஆகியவற்றில் திறமை மிக்க ஆறு கலைஞர்களுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான ‘கலைச்செம்மல் விருது’ வழங்கப்பட்டது. இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன், தமிழக தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.