districts

img

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

இராமநாதபுரம், மார்ச் 6- இராமநாதபுரம் மாவட்  டம் கடலாடி வட்டாரம் சாயல்  குடி சமுதாய கூடத்தில் நூற்  றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி  பெண்களுக்கு சமுதாய வளை காப்பு விழா நடைபெற்றது. கடலாடி வட்டாரம்  சாயல்குடி சமுதாயக்கூடத் தில் சமூக நலன் மற்றும் மக ளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணி கள் திட்டத்தின் சார்பில் நூற்  றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி  தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடை பெற்றது. கடலாடி வட்டார குழ ந்தை வளர்ச்சித் திட்ட அலு வலர் சசிகலா தலைமை வகித்தார். கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்  சரவணன் முன்னிலை வகித் தார். சிறப்பு விருந்தினராக  சாயல்குடி பேரூராட்சித்  தலைவர் மாரியப்பன் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்  பட்ட கர்ப்பிணி பெண் களுக்கு சமுதாய வளை காப்பு நடத்தி சீர்வரிசை, ஐந்து வகையான உணவு வழங்கினார்.  நிகழ்ச்சியில் டாக்டர்  இராமசந்திரன், கண்கா ணிப்பாளர் வேலுமணி, மேற்  பார்வையாளர்கள் பண் ணையரசி, முத்துச்செல்வி மற்றும் செவிலியர்கள், அங் கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக  கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் மு. வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார்.