ஒட்டன்சத்திரம், மார்ச் 6- 100 நாள் பணிகளுக்கு மூடு விழா நடத்த மத்திய அரசு திட்ட மிட்டுள்ளதாக இடையக் கோட்டை அருகே நடந்த நிகழ்ச்சி யில் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா புலி யூர்நத்தம் ஊராட்சி சின்ன குளிப்பட்டி சர்க்கரைபாவா தர்கா முன்பு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, பி.என்.கல்லுப்பட்டியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம், ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் பொது நூலக கட்டிடம், பெரியகுளிப் பட்டில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டிடம், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டி டங்களை உணவு மற்றும் உண வுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார். அதே போல ரூ.1 கோடி 30 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் அமைச்சர் அர.சக்கர பாணி பங்கேற்று பணியை தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் அர.சக்கர பாணி பேசியதாவது: பெண்களுக்கு விடியல் பய ணத்திட்டத்தின் கீழ் நகர பேருந்து களில் கட்டணமில்லாத பய ணம். அதே போல மகளிர் உரி மைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வரு கிறது. விடுபட்ட மகளிர் அனை வருக்கும் விரைவில் மகளிர் உரி மைத்தொகை வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதவர் உதயநிதி ஸ்டாலின் ஆகி யோர் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவி களுக்கு புதுமைப்பெண் திட்டத் தின்கீழ் மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப் பட்டு வருகிறது. அதே போல மாணவர்களுக்கும் வழங்கப் பட்டு வருகிறது.
இதனால் பெண்களின் கல்வி வளர்ச்சி தமிழ்நாட்டில் 34 சதவிகி தம் உயர்ந்துள்ளது. இந்தியாவி லேயே அதிகம் உயர்கல்வி படிக் கின்ற மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் கேதையுறும்பு கிராமத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. 2010 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி யில் இருந்தபோது 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியை அறிவித்து கொண்டு வரப்பட்டது. தற்போது 100 நாள் பணிக்கு கடந்த 4 மாதமாக மத் திய அரசு கூலித்தொகை வழங்கா மல் வஞ்சித்து வருகிறது. இத் திட்டத்திற்கு மத்திய அரசு மூடு விழா நடத்த திட்டமிட்டுள்ளது. ஊதியம் வழங்க வேண்டும் என்று பலமுறை முதல்வர் மு.க.ஸ்டா லின் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியும் இன்னும் பணம் வரவில்லை. கண்டிப்பாக 100 நாள் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் சேர வேண்டிய கூலித்தொகை அனைத்தும் வந்துவிடும். கரூர் காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வந்து அர வக்குறிச்சியில் குடிநீர் சுத்தி கரிக்கப்பட்டு ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு கொண்டு வரும் திட்டம் ரூ.1000 கோடி மதிப்பீட் டில் தற்போது நடைபெற்று வரு கிறது. இத்திட்டத்தின்கீழ் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் தனித்தனி குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் முழுமை அடைந்தால் எதிர்வரும் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்ச னையே இருக்காது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத் தின் கீழ் 2 ஆயிரம் வீடுகள் ஒதுக் கப்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் வருகின்ற 15ம் தேதி அந்த அந்த ஊராட்சிகளில் நடைபெற உள்ள சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மனு கொடுத்து பயன்பெறவும். இவ்வாறு அமைச்சர் அர. சக்கரபாணி பேசினார். இந்நிகழ்ச்சிகளில் ஒட்டன் சத்திரம் திமுக ஒன்றிய செயலா ளர்கள் ஜோதீஸ்வரன், எஸ்.ஆர்.கே.பாலு, இடையக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புக ழேந்தி, தங்கச்சியம்மாபட்டி ஊரா ட்சி மன்ற தலைவர் முருகா னந்தம் மற்றும் அரசு முறை அதி காரிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர்.