districts

img

இராணி அண்ணா காலனி மக்களுக்கு பட்டா வழங்கிட சிபிஎம் கோரிக்கை

சிவகாசி, மார்ச் 6- சிவகாசி இராணி அண்ணா காலனியில்  குடியிருப்போருக்கு பட்டா வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்டது இராணி அண்ணா காலனி. இங்கு பல  ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட குடும்  பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால்,  வருவாய்த்துறை சார்பில் இப்பகுதியின ருக்கு குடிமனைப் பட்டா வழங்கப்படவில்லை.   எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் வீட்டுமனைப் பட்டா வழங்கி டக் கோரி கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாநகர் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் தலைமையேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என். தேவா துவக்கி வைத்தார். இதில்,  மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலசுப்பிர மணியன், மாநகர் குழு உறுப்பினர்கள் இ. பழனி, எம்.முத்துச்சாமி, முத்துராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.