districts

பிஎட் வகுப்பு நடைபெறாமலே ஏமாற்றுவதா?

சிவகங்கை, மார்ச் 6- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் பி.எட் கல்லூரி களில் வகுப்பு நடைபெறாமலேயே பாடங்  கள் நடைபெற்றதாக அதிகாரிகள் கூறு வது ஊழலுக்கு வழிவகுக்கும் என்று இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றம் சாட்டி யுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு  வாலிபர் சங்கம் புகார் மனு அளித்துள்ளது.  ஆசிரியர் பணிக்கு பி.எட்., படிப்பு அவ சியம். ஒரு காலத்தில் ஓராண்டாக இருந்தது  காலப்போக்கில் பி.எட் படிப்பு இரண்டு  ஆண்டுகளாக மாறிவிட்டது. இந்நிலையில் மானாமதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் கல்லூரிகள் செயல்படாமலும், வகுப்ப றைக்கு மாணவ- மாணவிகள் செல்லாம லும் பிஎட் கல்லூரி மாணவ -மாணவிகள் படித்து வருவதாக ஆசிரியர்கள், அதிகாரி கள் கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு சிவ கங்கை மாவட்ட கல்வித்துறை அதிகாரி கள் உதவியாக இருக்கிறார்கள். கல்வித்  துறையில் ஊழலுக்கு இவை வழிவகுக்கிறது.  இதுதொடர்பாக  மாவட்ட ஆட்சித் தலை வர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்  டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கவுதம், மாவட்டச்  செயலாளர் சுரேஷ் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.